உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் 2022ம் ஆண்டில் 1136 டன் தங்கத்தினை வாங்கியுள்ளன. இது முந்தைய ஆண்டில் 450 டன்னாக இருந்தது. இது 55 ஆண்டு உச்சத்தினை எட்டியுள்ளது.
மேலும் தங்கத்தில் சில்லறை முதலீடும் அதிகரித்துள்ளது. உலகளாவிய அளவில் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து முதலீட்டாளர்கள் வாங்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி
இதே இந்திய ரிசர்வ் வங்கி 2022ல் 33 டன் தங்கத்தை வாங்கியிருந்தது. இது 2021ல் 77 டன் தங்கத்தினை வாங்கியிருந்தது. ஆக 2022ல் 57% குறைவாக இருந்தது.
இதற்கிடையில் ஸ்பாட் கோல்டின் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு, இன்று சுமார் 1882 டாலராக காணப்படுகின்றது. இந்த விலையானது கோல்டுமேன் சாச்சஸ் தங்கத்தின் விலை சுமார் 1950 டாலர்களை நடப்பு ஆண்டில் எட்டலாம் என கணித்துள்ளது.
சீனாவிலும் தேவை அதிகரிக்கலாம்
சீனா தற்போது தனது கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம். இது தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
இதற்கிடையில் உலக வங்கியும் வங்கிகள் தங்கத்தினை வாங்கி வைப்பது என்பது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என கூறியுள்ளது.
ஏன் தங்கம் அதிகம் வாங்கப்படுகிறது?
கடந்த ஆண்டு தங்கத்தின் தேவையானது ஒரு தசாப்தத்தில் இல்லாத அளவுக்கு உச்சத்தில் இருந்தது. இது மத்திய வங்கிகள் பாதுகாப்பு புகலிடமாக கருதி தங்கத்தில் முதலீடுகளை குவித்தன.
மேலும் பணவீக்கம் என்பது பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தில் காணப்பட்டது. இதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமைந்தது. தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி விகிதமானது சரியலாம் என்ற கவலைகளுக்கு மத்தியில், மேற்கொண்டு பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை பலதரப்பினரும் வாங்கி குவித்தனர். இதன் காரணமாக விலையானது அதிகரித்தது.
துருக்கி & சீனா
நடப்பு ஆண்டிலும் இந்த கவலையானது தொடர்ந்து தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் தொடர்ந்து அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா மற்றும் துருக்கியில் தேவையானது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
தொடர்ந்து வாங்கலாமா?
பல நாடுகளில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், ரெசசன் அச்சம் என்பது இருந்து வருகின்றது. இதற்கிடையில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என்று உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது.
மத்திய வங்கிகள் கடந்த ஆண்டில் வாங்கி குவித்ததை போலவே நடப்பு ஆண்டிலும் தங்கத்தினை வாங்கி குவிக்கலாம். இது மேற்கோண்டு விலையை ஆதரிக்கலாம். குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவி வரும் ரெசசன் அச்சத்தின் மத்தியில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் எப்படி?
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவில் அதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக வரியும் கடந்த பட்ஜெட் 2023ல் அதிகரிக்கப்பட்டது. இது மேற்கொண்டு விலையினை ஊக்குவிக்கலாம்.இதற்கிடையில் ரூபாயின் மதிப்பானது அழுத்தம் கண்டால் இதுவும் மேற்கொண்டு தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். தங்கம் விலையானது தொடர்ந்து சர்வதேச சந்தையில் உச்சம் எட்டி வரும் நிலையில், மேற்கொண்டு இந்தியாவில் விலையை ஊக்குவிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!



Click it and Unblock the Notifications