சமூகவலைத்தளம் என்றால் பெரும்பாலானவர்கள் கூறுவது இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டிவிட்டர், ஸ்னாப்சாட் ஆகியவை தான். ஆனால் உலகளவில் ஒரு பெரிய சமுகம் குவோரா, ரெட்டிட் போன்ற தளத்தில் அதிகப்படியான நேரத்தைச் செலவுகள் செய்கின்றனர். இதில் பிற தளத்தில் இருப்பது போல் வீடியோ, ஹீரோ, ஹீரோயின்களின் போட்டோ ஆகியவை இருக்காது. மக்கள் சார்ந்த விஷயங்கள், மக்களின் விவாதங்கள் ஆகியவை தான் அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் சமீபத்தில் Quora-வில் "மிகவும் விலை உயர்ந்த தாவரம் எது?" என்ற கேள்வி டிரெண்டாகி அதற்கு அதிகப்படியான பதில்கள் குவிந்தன. ஒவ்வொரு பயனரும் பல விஷயங்களை முன்வைத்தனர் சிலர் தேக்கு, செம்மரம், மூங்கில் எனப் பல தாவரங்களை முன்வைத்தாலும் கடைசியில் முடிவுக்கு வந்தது சிவப்புத் தங்கம் தான். பலவிதமான ஆலோசனைகளுக்கு மத்தியில் சிவப்புத் தங்கம் என்ற ஒரு செடி தேர்வானது அதைப் பயிரிடுபவர்களுக்குப் பண மழை நிச்சயம் என்பதால் இது தேர்வானது.'

இவர்கள் சிவப்புத் தங்கம் என்று குறிப்பிடப்படுவது குங்குமப்பூவைத் தான், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜம்முவில் உள்ள கிஷ்த்வார் மற்றும் ஜன்னத்-இ-காஷ்மீரில் உள்ள பாம்பூர் போன்ற பகுதிகளில் முக்கியமாக வளர்க்கப்படுவது இந்தத் தாவரம்.
தண்டு இல்லாத அமைப்புடன் 15 முதல் 25 செமீ மட்டுமே உயரத்தில் வளரக்கூடியது. அதன் மெல்லிய, புல் போன்ற இலைகள் மற்றும் நீலம், ஊதா மற்றும் வெள்ளை பூக்களில் உருவாகுவது தான் குங்குமப்பூ.
ஒரு செடியில் 2-3 பூக்கள் மட்டுமே பூக்கும் தன்மை கொண்டது இந்தச் செடி. இருப்பினும், உற்பத்தியில் இருக்கும் பற்றாக்குறை காரணமாக வருடம் முழுவதும் இதற்கு அதிகப்படியான விலை கிடைக்கிறது. இதனாலேயே சந்தையில் அதிகப்படியான போலி குங்குமப்பூ உருவாகிறது.
உண்மையான குங்குமப்பூ சந்தையில் ஒரு கிலோ 3 லட்சம் அல்லது அதற்கும் அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் மிகவும் விலையுயர்ந்த மசாலாப் பொருளாக இருக்கும் இது குறிப்பாக அரபு நாடுகளின் உணவில் முக்கிய அங்கமாகக் குங்குமப்பூ விளங்குகிறது.

ஆனால் குங்குமப்பூ மட்டுமே அதிகம் வருமானம் அளிக்கும் தாவரம் அல்ல. கேரளாவின் பசுமையான நிலப்பரப்புகளில் அதிகம் காணப்படும் ஓன்று கருப்பு மிளகு. வரலாற்றில் கருப்பு மிளகு-கிற்கு மிகப்பெரிய கதை உள்ளது, ஐரோப்பா முதல் ஆஸ்திரேலியா வரையில் இதற்கு அதிகப்படியான டிமாண்ட் உள்ளது.
இதைத் தொடர்ந்து மற்றொரு தாவரம் வெண்ணிலா, ஐஸ்கிரீம் முதல் காஃபி வரையில் வெண்ணிலா பயன்படுத்தப்படும் முக்கியமான காஸ்ட்லி பொருளாகும். இந்தியாவில் அதன் சாகுபடி ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், ஒரு கிலோவுக்கு ரூ.50 ஆயிரம் வரை கிடைக்கும். வெண்ணிலா அதன் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வருடம் முழுவதும் ஜாக்பாட் தான்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

கேரள சம்மர் பம்பர் லாட்டரி BR-108 முடிவுகள் ரூ.10 கோடி ஜாக்பாட் யாருக்கு?

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications