மறைந்த பிரபல பங்குச்சந்தை வர்த்தகர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா. 2023இல் புதிதாக உருவாகிய 7 இந்திய பில்லியனர்களில் ஒருவர். அவர் வைத்திருந்த 3 பங்குகள் மல்டிபேக்கர் லாபத்தை 2023 ஆம் ஆண்டில் தந்துள்ளது.
ஒரே மாதத்தில் ரூ.650 கோடியை அள்ளித் தந்துள்ளன. இந்திய புதிய மில்லியனர்கள் வரிசையில் ரேகா ஜுன்ஜுன்வாலா இடம்பெறுவதற்கு இதுவும் முக்கியக் காரணமாகும். ரேகா ஜுன்ஜுன்வாலாவுக்கு கிடைத்த மெகா பரிசான ரூ.650 கோடியில் பெரும்பான்மையாக டைட்டான் பங்குகளில் இருந்து 5.4 சதவீத லாபம் வந்துள்ளது.

மல்டிபேக்கர் பங்குகள் என்பது அதன் வாங்கிய விலையில் இருந்து பல மடங்கு லாபத்தைத் தரக்கூடிய ஒரு ஈக்குவிட்டி பங்கு ஆகும்.
இந்த நிதியாண்டு செப்டம்பர் காலாண்டுபடி லிஸ்டடு நிறுவனங்களில் ஜுன்ஜுன்வாலா வைத்திருந்த 25 பங்குகளின் மதிப்பு 14 சதவீதம் அதிகரித்து ரூ.39,000 கோடியைத் தந்தது.
ஒரு டாப் முதலீட்டாளர் குறைந்தபட்சம் 1 சதவீத பங்கு வைத்திருக்கும் நிறுவனங்களின் தகவல்கள் மட்டும் வெளியாகியுள்ளன.
Tata Motors DVR பங்கு இந்தாண்டில் 138 சதவீதம் அதிகரித்து சிறந்த போர்ட்போலியோ பங்காக இருந்தது. செப்டம்பர் காலாண்டு முடிவில் அந்த நிறுவனத்தில் ரேகா ஜுன்ஜுன்வாலா 1.92 சதவீத பங்கை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
DB Realty நிறுவனத்தில் அவர் வைத்திருந்த பங்குகளின் மதிப்பு இந்த ஆண்டு 108 சதவீதம் அதிகரித்தது. அதேபோல் இன்ப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் நிறுவனமான NCC-இன் பங்குகளின் மதிப்பு இருமடங்கு உயர்ந்துள்ளது.
டைட்டன் நிறுவனத்தில் உள்ள ஜுன்ஜுன்வாலா குடும்பத்தாரின் பங்கு அவர்களது மிகப்பெரிய சொத்து ஆகும். 2023 ஆம் ஆண்டில் டைட்டான் நிறுவனத்தில் வைத்திருந்த பங்கு மதிப்பு 39 சதவீதம் அதிகரித்தது. டைட்டனில் ரேகாவுக்கு ரூ.17,000 கோடிகளுக்கு பங்குகள் உள்ளது.
2023 மார்ச் மற்றும் ஜூன் காலாண்டில் ரேகா ஜுன்ஜுன்வாலா தனது பங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்தார்.
டாடா மோட்டார்ஸில் ஜுன்ஜுன்வாலா 1.6 சதவீத பங்கு வைத்திருக்கிறார். அந்த பங்கின் மதிப்பு இந்த ஆண்டில் 88 சதவீதம் உயர்ந்துள்ளது. உயர்வின் சந்தை மதிப்பு ரூ.3,800 கோடி ஆகும். ஜுன்ஜுன்வாலா குடும்பத்தாரின் இரண்டாவது பெரிய முதலீடு இதுவாகும்.
ரேகா ஜுன்ஜுன்வாலாவின் போர்ட்போலியோவில் வா டெக் வாபாக் (95% 2023 அதிகபட்சமாக), Wockhardt (88%), ஜியோஜிட் பைனான்சியல் சர்வீசஸ் (70%), Nazara Technologies (53%), கரூர் வைஸ்யா வங்கி (51%) மற்றும் மெட்ரோ பிராண்ட்ஸ் (49%) ஆகியவை உள்ளன.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications