இந்திய பங்குச்சந்தையில் குறிப்பிட்ட நபர்கள் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வது அல்லது அந்த நிறுவன பங்குகளை விற்பனை செய்துவிட்டு அதிலிருந்து வெளியேறுவது போன்ற செயல்களில் ஈடுபடும்போது அது ஒரு விவாத பொருளாக மாறும். அப்படிப்பட்ட ஒருவர் தான் ரேகா ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.
இவர் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மூன்று நிறுவனங்களில் இருந்து தன்னுடைய பங்குகளை பகுதியளவு விற்பனை செய்துள்ளார். இதுதான் தற்போது பங்குச்சந்தை நிபுணர்கள் மத்தியில் பேசு பொருளாக இருக்கிறது.

கனரா வங்கியில் இவர் கிட்டதட்ட 3.75 கோடி ஈக்விட்டி பங்குகளை தன் வசம் வைத்திருந்தார். இதில் 1.12 கோடி பங்குகளை மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் இவர் விற்பனை செய்துள்ளார்.
தற்போது இவர் வசம் இருக்கும் கனரா வங்கி பங்குகளின் எண்ணிக்கை 2.63 கோடி ஆகும். இதன் தற்போதைய மதிப்பு 1,615 கோடி ரூபாய் ஆகும். கனரா வங்கி பங்குகளின் மதிப்பு ஓராண்டில் 115% வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரேகா ஜுன்ஜுன்வாலா ராகவ் ப்ரொடக்டிவிட்டி என்ஹான்ஸ் என்ற நிறுவனத்தில், 11,74,252 ஈக்விட்டி பங்குகளை வைத்திருந்தார். இதன் மதிப்பு 75 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இதில் அவர் 12,400 பங்குகளை விற்பனை செய்திருக்கிறார். தற்போது அவர் வசம் இருக்கும் பங்குகளின் எண்ணிக்கை 11,61,852 ஆகும்.
ரேகா ஜுன்ஜுன்வாலா க்ரைசல் லிமிடெட் நிறுவனத்தில் தான் வைத்திருந்த பங்குகளிலும் ஒரு குறிப்பிட்ட பகுதியை விற்பனை செய்திருக்கிறார். இந்த நிறுவனத்தில் அவர் 40 லட்சம் ஈக்விட்டி பங்குகளை வைத்திருந்தார். அதில் 20 ஆயிரம் பங்குகளை விற்பனை செய்து தற்போது 39 லட்சத்து 80 ஆயிரம் பங்குகளை தன் வசம் வைத்திருக்கிறார். இந்த நிறுவனத்தில் அவர் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு 1,956.5 கோடி ரூபாய் ஆகும்.
கடந்த ஓராண்டில் க்ரைசல் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 45% வளர்ச்சி அடைந்திருந்தது, நடப்பு ஆண்டில் 15% வளர்ச்சி அடைந்துள்ளது. ராகவ் ப்ரொடக்டிவிட்டி என்ஹான்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த ஓராண்டில் 45% வளர்ச்சியையும், 2024ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து 15% சரிந்துள்ளது.
தற்போது ரேகா ஜுன்ஜுன்வாலாவின் பங்கு போர்ட்ஃபோலியோவை பொறுத்தவரை 26 நிறுவனங்களில் ரூ.51,912 கோடி மதிப்புள்ள பங்குகளை சொந்தமாக வைத்திருக்கிறார்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications