மனிஷ் மல்ஹோத்ரா ஜி.. 40% கொடுங்க ஜி.. முகேஷ் அம்பானி செம டீலிங்..!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் குழுமத்தில் தற்போது ரீடைல் வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் மிகவும் பிரபலமாக இருக்கும் மனிஷ் மல்ஹோத்ரா பிராண்டின் பெரும் பகுதி பங்குகளை முகேஷ் அம்பானி கைப்பற்றியுள்ளார்.

இந்தக் கைப்பற்றல் மூலம் ஆடம்பர மற்றும் டிசைனர் பிரிவு ஆடை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் ரீடைல் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்ய முடியும்.

ஆதித்யா பிர்லா நிறுவனம்

ஆதித்யா பிர்லா நிறுவனம்

சமீபத்தில் ஆடம்பர பிரிவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்காக ஆதித்யா பிர்லா நிறுவனம் இந்தியாவின் மற்றொரு முன்னணி பிராண்டான சப்யாசாச்சி பிராண்டை கைப்பற்றியது. தற்போது ரிலையன்ஸ் மனிஷ் மல்ஹோத்ரா பிராண்டை கைப்பற்றியதன் மூலம் பிர்லா மூலம் நேரடியாகப் போட்டிப்போட முடியும் என்பது தான் மிக முக்கியமானதாக உள்ளது.

மனிஷ் மல்ஹோத்ரா

மனிஷ் மல்ஹோத்ரா

மனிஷ் மல்ஹோத்ரா பாலிவுட் சினிமா துறையில் மிகவும் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர், மனிஷ் தயாரித்த ஆடைகள் பல படங்கள், பேஷன் ஷோ, திருமண விழா எனப் பலவற்றிலும் இடம் பெற்றுள்ளது. டிசைனர் மற்றும் ஆடம்பர ஆடை பிரிவில் மனிஷ் மல்ஹோத்ரா நிறுவனத்திற்கு மிகப்பெரிய வர்த்தகம் இந்தியாவில் உள்ளது.

MM ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட்

MM ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட்

மனிஷ் மல்ஹோத்ரா-வின் MM ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் வர்த்தகம், IP உரிமைகள், லைசென்ஸ் போன்ற அனைத்தும் உள்ளது. 2005 முதல் இயங்கி வரும் MM ஸ்டைல்ஸ் நிறுவனம் இதுவரை வெளியில் இருந்து முதலீட்டை திரட்டியுள்ளது.

வெளி சந்தை முதலீடு

வெளி சந்தை முதலீடு

ஆனால் முதல் முறையாகத் தனத வர்த்தகத்தை இந்தியாவிலும், வெளிநாட்டிலும் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக 16 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக வெளி சந்தையில் முதலீட்டை திரட்டியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் தற்போது MM ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் சுமார் 40 சதவீத பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது.

ஈஷா அம்பானி

ஈஷா அம்பானி

இந்திய ஆடை கலாச்சாரத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் மிகவும் சிறப்பான பயணத்தில் மனிஷ் மல்ஹோத்ரா-வின் MM ஸ்டைல்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளதில் மகிழ்ச்சி அடைகிறோம் என ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் தலைவரான ஈஷா அம்பானி தெரிவித்துள்ளார்.

30 வருடம்

30 வருடம்

மனிஷ் மல்ஹோத்ரா ஆடை வடிவமைப்பில் சுமார் 30 வருடங்களாகப் பணியாற்றி வருகிறார், சுமார் 700 ஊழியர்களைக் கொண்டு பிரம்மாண்டமான முறையில் ஆடைகளை டிசைன் செய்து ஆடைகளை விற்பனை செய்து வருகிறார்.

மும்பை, டெல்லி, ஹைதராபாத்

மும்பை, டெல்லி, ஹைதராபாத்

மனிஷ் மல்ஹோத்ரா-வின் MM ஸ்டைல்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமாக மும்பை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடத்தில் 4 ஆடம்பரமான ஷோரூம் உள்ளது. இது மட்டும் அல்லாமல் மனிஷ் மல்ஹோத்ரா பிராண்டுக்கு இணையத்தில் 1.2 கோடி வாசகர்கள் உள்ளனர்.

இந்தியா முழுவதும்

இந்தியா முழுவதும்

தற்போது ரிலையன்ஸ் ரீடைல் உடன் சேர்ந்து மனிஷ் மல்ஹோத்ரா-வின் MM ஸ்டைல்ஸ் தயாரிப்புகள் இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும், குஜராத் முதல் மேற்கு வங்காளம் வரையில் வர்த்தகத்தை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் விரிவாக்கம் செய்ய முடியும்.

சப்யாசாச்சி

சப்யாசாச்சி

இதைவிட முக்கியமாக எப்போதும் இல்லாத வகையில் மனிஷ் மல்ஹோத்ரா-வின் தயாரிப்புகள் வெளிநாட்டில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இது ஆதித்யா பிர்லாவின் சப்யாசாச்சி வர்த்தகத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+