ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 46வது வருடாந்திர கூட்டத்தை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் முதல் சக போட்டி நிறுவனங்களும் கூர்ந்து கவனித்து வரும் வேளையில், ரிலையன்ஸ் சாம்ராஜியத்தின் அதிகாரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முக்கிய பாதையை உருவாக்கும் முயற்சியில் உயர்மட்ட நிர்வாகத்தில் முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 46வது வருடாந்திர கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாக குழு கூட்டத்தில் முக்கிய மாற்றத்தை அறிவித்தார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக குழுவில் நீதா அம்பானி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதை தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக குழுவில் முகேஷ் அம்பானி வாரிசுகளும், டெலிகாம், ரீடைல், நியூ எனர்ஜி பிரிவின் தலைவர்களான ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானி ஆகியோரை non-executive directors ஆக நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த திடீர் மாற்றம் எதிற்காக..?
66 வயதான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தொடர சட்டப்படி 70 வயது வரையில் மட்டுமே அனுமதி உள்ளது. இந்த நிலையில் அடுத்த 5 வருடம் முகேஷ் அம்பானி தொடர் வேண்டுமெனில் அதாவது அவருடைய 71 வயது வரையில் இப்பணியை தொடர கட்டாயம் சிறப்பு தீர்மானம் தேவை.

முகேஷ் அம்பானி வாரிசுகளாக ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ தலைவராக இருக்கிறார், ஈஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடைல் தலைவராக உள்ளார், அனந்த் அம்பானி நியூ எனர்ஜி பிரிவை நிர்வாகம் செய்து வருகிறார், நீதா அம்பானி ரிலையன்ஸ் பவுண்டேஷன், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி பணிகளை நிர்வாகம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் முறையாக நிர்வாக தலைமையை படிப்படியாக வாரிசு கைகளுக்கு கொடுக்கும் பொருட்டு 46வது வருடாந்திர கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications