ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 46வது வருடாந்திர கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாக குழவில் இருந்து நீதா அம்பானி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதை தொடர்ந்து ரிலையன்ஸ் பவுண்டேஷன் பிரிவின் சேர்பர்சனாக இருப்பார் என தெரிவித்தார்.
இதை தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக குழுவில் முகேஷ் அம்பானி வாரிசுகளும், டெலிகாம், ரீடைல், நியூ எனர்ஜி பிரிவின் தலைவர்களான ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானி ஆகியோர் Board of Directors ஆக நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இந்த தருணம் மிகவும் முக்கியமானது என கூறிய முகேஷ் அம்பானி 1977ல் எனக்கு 20 வயதாகும் போது என்னுடைய தந்தையும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தின் நிறுவனரான திருபாய் அம்பானி தன்னை ரிலையன்ஸ் நிர்வாக குழுவில் இணைத்தது நினைவுக்கு வருகிறது.
மேலும் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானி ஆகியோர் Board of Directors ஆக நியமிக்கப்பட்டு உள்ளதை நான் அவர்களிடம் என்னையும், என்னுடைய தந்தையும் பார்க்கிறேன். ஈஷா, ஆகாஷ், அனந்த் ஆகியோர் தற்போது அவரவர் பணிகளை சிறப்பாக செய்கின்றனர்.
குறிப்பாக நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் உடன் ஈஷா, ஆகாஷ், அனந்த் ஆகியோர் மிகவும் நெருக்கமாக பணியாற்றி அனைத்து விதமான அனுபவத்தை பெற்று வருகின்றனர். ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் குழுமத்தின் உயர்மட்ட அதிகாரிகளில் பல மூத்த அதிகாரிகள் உள்ளனர்.

இதேபோல் ஈஷா, ஆகாஷ், அனந்த் ஆகியோரின் கீழ் இளம் நிர்வாக குழு உள்ளது. இந்த அனுபவம், இளமை காம்போ ரிலையன்ஸ்-க்கு பெரிய அளவில் உதவுகிறது. திருபாய் அம்பானி வேகமாக வளர முக்கிய காரணம் 20 வயதில் முகேஷ் அம்பானி நிர்வாக குழுமத்தில் சேர்ந்தது தான்.
கிட்டத்தட்ட அதே நிலை தான் தற்போது ஈஷா, ஆகாஷ், அனந்த் ஆகியோர் Board of Directors ஆக நியமிக்கப்பட்டு உள்ளது. முகேஷ் அம்பானி வாரிசுகளாக ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ தலைவராக இருக்கிறார், ஈஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடைல் தலைவராக உள்ளார், அனந்த் அம்பானி நியூ எனர்ஜி பிரிவை நிர்வாகம் செய்து வருகிறார், நீதா அம்பானி ரிலையன்ஸ் பவுண்டேஷன், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி பணிகளை நிர்வாகம் செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications