இந்திய ரீடைல் சந்தையில் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தற்போது ஆடம்பரம் மற்றும் முன்னணி பிராண்ட் பொருட்களின் விற்பனை சந்தையைப் பிடிக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக உள்ளது.
ஏற்கனவே ஆடம்பர சந்தைக்கு எனப் பிரத்தியேகமாக ஜியோ வோல்டு பிளாசா மாலில் ரிலையன்ஸ் உலகின் முன்னணி ஆடம்பர கடைகளில் நேரடி விற்பனை தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.
இதன் வரிசையில் ரே-பான் வர்த்தகத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இந்தியாவில் அதிகப்படியான சந்தை மதிப்புக் கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் இந்தியாவில் ரே-பான் பிராண்டட் ஸ்டோர்களைத் திறக்க இத்தாலியின் லக்சோட்டிகா குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரே-பான் பிராண்ட்
இந்தப் பேச்சுவார்த்தையில் வெற்றிபெற்றால் ரே-பான் பிராண்டடின் மொத்த இந்திய வர்த்தகத்தையும் ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றும். இதன் மூலம் ரிலையன்ஸ் சொந்தமாகத் தனதுக்குப் பிடித்த இடங்கள் அனைத்திலும் ரே-பான் ஸ்டாண்டலோன் ஸ்டோர்களை நாடு முழுவதும் திறக்கும்.
அதிகாரப்பூர்வ விற்பனையாளர்
ரே-பான் வர்த்தகத்தைக் கைப்பற்றினால் இந்தியாவின் அதிகாரப்பூர்வ விற்பனையாளராக ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் விளங்கும். இதன் மூலம் ரே-பான் பிராண்டின் ஒட்டுமொத்த வர்த்தகமும் ரிலையன்ஸ் கட்டுப்பாட்டிற்கு வரும். இதற்கான இறுதி உரிமையாளர் ஒப்பந்தம் இன்னும் கையெழுத்திடாத நிலையில் பேச்சுவார்த்தையில் முக்கியக் கட்டத்தை நெருங்கியுள்ளது.
டிஎல்எஃப் பிராண்ட்
டிஎல்எஃப் பிராண்ட் நிறுவனத்திடம் இருந்து சமீபத்தில் ரிலையன்ஸ் பிராண்ட் சன்கிளாஸ் ஹட்டின் நிறுவனத்தைக் கைப்பற்றியது. சன்கிளாஸ் ஹட்டின் நிறுவனம் ப்ராடா, பர்பெரி, வெர்சேஸ், டாம் ஃபோர்டு, டோல்ஸ் & கபனா மற்றும் ஓக்லி, போன்ற பல பிராண்டுகளின் கண்ணாடி விற்பனையாளராகவும், இந்திய விற்பனைக்கான பிரான்சைஸ்களையும் கொண்டு உள்ளது.
Luxottica
இந்நிலையில் Luxottica உடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி Ray-Ban பிராண்ட தயாரிப்புகளை இந்தியா முழுவதும் விற்பனை செய்யும் திட்டத்தைக் கைப்பற்ற உள்ளது.Luxottica தற்போது பிற பிராண்ட் கடைகள் உடன் இணைந்து வர்த்தகம் செய்கிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications