ஆசியாவின் மிகப் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மதிப்பு மிக்க நிறுவனமாகும். முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸை நிறுவினார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு ரூ.16,63,000 கோடியாகும்.
1957 ஆம் ஆண்டில் ஒரு நூல் வர்த்தக நிறுவனமாக இது தொடங்கப்பட்டது. இன்றைக்கு பெட்ரோகெமிக்கல்ஸ், ஜவுளி, ஆயில் மற்றும் எரிவாயு, ரீடெய்ல், டிஜிட்டல் பிராண்ட் ஜியோ ஆகிய நிறுவனங்களைக் கொண்டுள்ளது.

முகேஷ் அம்பானி, அவரது பிள்ளைகள், ஈஷா, ஆனந்த், ஆகாஷ் தவிர ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போர்டில் இந்தியாவின் டாப் சம்பளம் பெறும் நிபுணர்களும் இடம் பெற்றுள்ளனர். இதில் சில உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர்களும் உள்ளனர். அவர்களது கல்வித்தகுதி பற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
முகேஷ் அம்பானி: மும்பை பல்கலைக்கழகத்தின் இன்ஸ்டிட்டியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜியில் கெமிக்கல் இஞ்ஜினியரிங் பட்டம் பெற்ற முகேஷ் அம்பானி தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டப்படிப்பில் 1980 சேர்ந்து சில மாதங்களிலேயே கைவிட்டு இந்தியாவுக்கு வந்து ரிலையன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்.
நான்-எக்ஸிகியூட்டிவ் டைரக்டர்கள்-
ஈஷா அம்பானி: ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்சர்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிடெட் மற்றும் ரியைலன்ஸ் அறக்கட்டளையின் செயல் தலைமைக்குழுவின் உறுப்பினராக உள்ளார். அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் சைக்காலஜி மற்றும் தெற்காசிய ஸ்டடீஸில் இரட்டை கல்விப் பட்டத்தை முடித்துள்ளார். தனது தந்தையைப் போலவே ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் படித்துள்ளார்.
ஆனந்த் அம்பானி: ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்சர்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் நியூ எனர்ஜி லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி, ரிலையன்ஸ் அறக்கட்டளை வாரியத்தின் உறுப்பினராக உள்ளார். அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டக்கல்வியை முடித்துள்ளார்.
ஆனந்த் அம்பானி: ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்சர்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் நியூ எனர்ஜி லிமிடெட் மற்றும் ரிலையன் நியூ சோலார் எனர்ஜி, ரிலையன்ஸ் அறக்கட்டளை வாரியத்தின் உறுப்பினராக உள்ளார். அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டக்கல்வியை முடித்துள்ளார்.
எக்ஸிகியூட்டிவ் டைரக்டர்கள்-
ஹிட்டல் ஆர் மெஸ்வானி: அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இஞ்சினியரிங் பட்டப்படிப்பை முடித்துள்ளார். வார்ட்டன் பிஸினஸ் ஸ்கூலில் பொருளாதாரத்தில் இளநிலை பட்டக்கல்வியை படித்துள்ளார்.
நிகில் ஆர் மெஸ்வானி: மும்பை பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டக்கல்வியை முடித்துவிட்டு அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இஞ்சினியரிங்க பட்டக்கல்வியை படித்துள்ளார்.
பிஎம்எஸ் பிரசாத்: ரிலையன்ஸ் நிறுவனத்தின் நீண்டகால அங்கத்தினரான பிரசாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அறிவியலில் இளநிலை பட்டப்படிப்பும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வியையும் படித்தார். டேராடூன் பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர்.
தனிப்பட்ட டைரக்டர்கள்-
அடில் ஜைனுல்பாய்: ஐஐடியின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரி . அமெரிக்காவின் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ படித்தவர்.
ரமிந்தர் எஸ் குஜ்ரால்: இவர் எல்எல்பி பட்டம் பெற்ற பொருளாதாரம் (ஹானர்ஸ்) பட்டதாரி. ஐஐஎம் அகமதாபாத்தில் எம்பிஏ பட்டமும், அமெரிக்காவின் பிளெட்சர் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்ஏ பட்டமும் பெற்றுள்ளார்.
சுமீத் பானர்ஜி: கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட், நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி பட்டம் பெற்றவர்.
அருந்ததி பட்டாச்சார்யா: ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கர்ஸின் இணை உறுப்பினராக உள்ளார்.
கே.வி.சௌத்ரி: சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றார், பின்னர் சென்னை ஐஐடியில் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
ஹெச்இ யாசீர் ஓட்டமான் ஹெச் அல் ருமாய்யன்: இவர் ஒரு சவூதி தொழிலதிபர். சவூதி அரேபியாவில் உள்ள கிங் பைசல் பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் பட்டம் பெற்றவர். அவர் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் பொது மேலாண்மை திட்டத்தில் பட்டம் பெற்றார்.
கேவி காமத்: ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான கேவி காமத், அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம்மில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவரும் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications