ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்று. பில்லியனர் முகேஷ் அம்பானியின் நிறுவனமான இது, இன்று உலகளவில் தனது வர்த்தகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றது.
இதற்கிடையில் நிபுணர்கள், அடுத்த மூன்று - ஐந்து ஆண்டுகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியையும் விஞ்சலாம் என்றும் கணித்துள்ளனர்.
ஆக இன்னும் 3 - 5 வருடங்களில் முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு காத்துக் கொண்டுள்ளது எனலாம்.
ரிலையன்ஸ் பங்கு ஏற்றம் காணலாம்
அதாவது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்னும் சில ஆண்டுகளில் நல்ல ஏற்றத்தினை காணலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாகவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நல்ல ஏற்றத்தினை கண்டு வருகின்றது. அதோடு இனியும் நீண்ட கால நோக்கில் இன்னும் ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸின் வணிகம் விரிவாக்கம்
ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு அற்புதமான செயல்திறனை கொண்டுள்ளது. இதனால் நீண்ட கால நோக்கில் நல்ல ஏற்றத்தினைக் காணலாம், இதனால் முதலீட்டாளர்கள் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். ரிலையன்ஸின் டிஜிட்டல் வணிகம் விரிவடைய ஆரம்பித்துள்ளது. ஆரம்பத்தில் ஒரே நேரத்தில் முதலீட்டாளர்கள் லார்ஜ் கேப் பங்கில் குவிந்த நிலையில், பங்கு விலை சற்று அழுத்தத்தினை கண்டது.
பங்கு விலை அதிகரிக்கலாம்
ஆனால் தற்போது ரிலையன்ஸின் வணிகம் சந்தை விரிவடைந்து வருகின்றது. குறிப்பாக இந்த நிறுவனத்தில் பல முதலீடுகள் குவிந்துள்ளன. இதனால் அதன் வணிகத்தினை விரிவாக்கம் செய்ய இது உதவிகரமாக இருக்கும். இதனால் இந்த பங்கில் முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் இதன் பங்கு விலையானது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 3 - 5 ஆண்டுகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கணிசமான லாபத்தினை கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை அதிகரிக்கலாம்
கொரோனா காலத்திலேயே லாக்டவுன் காரணமாக தேவைகள் முடங்கியிருந்தன. அந்த காலகட்டத்திலேயே ரிலையன்ஸ் போன்ற சில்லறை வர்த்தக நிறுவனங்கள் நல்ல லாபத்தினை கண்ட நிலையில், தற்போது லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கியுள்ளது. தேவையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. டிஜிட்டல் வளர்ச்சியும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆக இதெல்லாம் ரிலையன்ஸுக்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இதன் பங்கு விலை அதிகரிக்கலாம் என்பது மறுப்பதற்கில்லையே.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications