ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் கச்சா எண்ணெய், தொலைத்தொடர்பு, ரீடெய்ல், மீடியா. விளையாட்டு உள்பட பல்வேறு துறை வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறது. முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் செய்தாத வணிகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் தற்போது தனது நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்து வருவதாக தெரிகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது துணை நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் புராஜெக்ட்ஸ் அண்ட் பிராப்பர்ட்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் லிமிடெட் (ஆர்பிபிஎம்எஸ்எல்) நிறுவனத்தில் அதன் முழு பங்குகளையும் ரிலையன்ஸ் ரீடெய்லுக்கு மாற்றியது.
ரிலையன்ஸ் புராஜெக்ட்ஸ் அண்ட் பிராப்பர்ட்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் ஐடி ஆதரவு சேவைகள், வணிகம் மற்றும் மனிதவள ஆதரவு சேவைகள், திட்டம் மற்றும் சொத்து மேலாண்மை சேவைகள் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. பங்குகள் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக மும்பை பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், துணை நிறுவனமான ரிலையன்ஸ் புராஜெக்ட்ஸ் அண்ட் பிராப்பர்ட்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் லிமிடெட் (ஆர்பிபிஎம்எஸ்எல்) நிறுவனத்தில் எங்களது 100 சதவீத பங்கும் ரிலையன்ஸ் ரீடெய்லுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த பரிவர்த்தனையை தொடர்ந்து, ரிலையன்ஸ் புராஜெக்ட்ஸ் அண்ட் பிராப்பர்ட்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் லிமிடெட் (ஆர்பிபிஎம்எஸ்எல்) நிறுவனத்தின் நேரடி துணை நிறுவனமாக இல்லை. மேலும் இந்நிறுவனம் ஸ்டெப்டவுன் நிறுவனத்தின் துணைநிறுவனமாக மாறியுள்ளது என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. ஸ்டெப்டவுன் துணை நிறுவனம் என்பது, தாய் நிறுவனத்தால் நேரடியாக அல்லாமல், முதல் நிலை துணை நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படும் இரண்டாம் நிலை துணை நிறுவனமாகும். இதன்படி, இனி ரிலையன்ஸ் புராஜெக்ட்ஸ் அண்ட் பிராப்பர்ட்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படும். ரூ.100 கோடி மதிப்புள்ள இந்த பரிமாற்றம், அதன் செயல்பாடுகளை நெறிப்படுத்தவும்,சில்லரை வணிகத்தை வலுப்படுத்தவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உத்தியின் ஒரு பகுதியாகும் என தகவல்.
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக முக்கிய பங்கு வகிக்கிறார். அடுத்த 2025-26ம் நிதியாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி காணும் என்று தரகு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது. இது தொடர்பாக கோல்டமேன் சாக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் செயல்பாட்டு மறுசீரமைப்பு மற்றும் மேக்ரோ பின்னணியும் சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளதால், அடுத்த நிதியாண்டில் அந்த நிறுவனத்தின் வருவாய் மேம்படும் என்று தெரிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.27 சதவீதம் குறைந்து ரூ.1,275ஆக இருந்தது.
Story Written: subramanian
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications