ஆக்சிஸ் வங்கியின் பர்கண்டி பிரைவேட் மற்றும் ஹூருன் இந்தியா ஆகியவை நம் நாட்டின் முன்னணி 500 நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த 500 நிறுவனங்களின் சராசரி வருவாய் ரூ.18,700 கோடியாக உள்ளது. 146 நிறுவனங்கள் ரூ.10,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளன.32 நிறுவனங்கள் வருவாய் ரூ.50,000 கோடியை தாண்டியுள்ளது. இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்கள் வருவாயை ஈட்டுவது மட்டுமல்லாமல், கவர்ச்சிக்கரமான லாபத்தையும் பதிவு செய்துள்ளன. நாட்டின் அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இந்தியாவின் அதிக வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. முகேஷ் அம்பானி நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 3 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.9.30 லட்சம் கோடியாக உள்ளது. இந்நிறுவனத்தின் மதிப்பு-வருவாய் மடங்கு விகிதம் 1.9 என்று குறைவாக இருப்பது, போட்டி நிறைந்த துறையில் அதன் வலுவான நிலையை காட்டுகிறது. அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்கள் பட்டியலிலும் இந்த அம்பானி நிறுவனம்தான் முதலிடத்தில் உள்ளது.
டாடா மோட்டார்ஸ்
டாடா குழுமத்தை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.4.43 லட்சம் கோடி வருவாயுடன் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்நிறுவனம் 27 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது இந்நிறுவனம் வாகன துறையில் அதன் வலுவான செயல்திறனை பிரதிபலிக்கிறது.
எச்டிஎஃப்சி வங்கி
நாட்டின் முன்னணி தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி ரூ.4.07 லட்சம் கோடி வருவாயுடன் அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. இவ்வங்கி விதிவிலக்கான 99 சதவீத ஆண்டு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. எச்டிஎஃப்சி வங்கியின் மதிப்பு-வருவாய் மடங்கு விகிதம் 3.5ஆக இருப்பது, நிதி சேவைகள் துறையில் அதன் வலுவான சந்தை மதிப்பீடு மற்றும் ஆதிக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் எச்டிஎஃப்சி வங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிசிஎஸ்
நாட்டின் மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) ரூ.2.43 லட்சம் கோடி வருவாயுடன் இந்த பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம் 6.6 என்ற மிக உயர்ந்த மதிப்பு-வருவாய் மடங்குகளை கொண்டுள்ளது. இது சாப்ட்வேர் மற்றும் சேவைகள் துறையில் அதன் தலைமையை காட்டுகிறது.
Story written by: Subramanian
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications