பெருநகரங்களில் மட்டுமே இருந்த மால்கள் தற்போது சிறு நகரங்களிலும் முளைக்க தொடங்கி விட்டன. நமக்கு தேவையான ஏ டூ இசட் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கி விடலாம் என்பதால் மக்கள் மால்களில் மிகவும் ஆர்வமாக பொருட்தளை வாங்க விரும்புகின்றனர். வளமான வர்த்தக வாய்ப்பு இருப்பதால் புதிது புதிதாக மால்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.
நம் நாட்டின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானிக்கும் ஒரு ஆசை வந்தது. ஆசைன்னா சின்ன ஆசை இல்ல சாரே பெரிய ஆசை. ஜியோ வேர்ல்ட் பிளாசா என்ற இந்தியாவின் மிகப்பெரிய ஆடம்பர மால்-ஐ தொடங்க முகேஷ் அம்பானி முடிவு செய்தார்.

முகேஷ் அம்பானியின் கனவு திட்டங்களில் ஒன்றான ஜியோ வேர்ல்ட் பிளாசாவை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செயல்படுத்த தொடங்கியது. மும்பையில் பந்த்ரா குர்லா வளாகத்தில் சுமார் 7.5 லட்சம் சதுர அடி பரப்பில் ஜியோ வேர்ல்டு பிளாசா கட்டப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நவம்பர் 1ம் தேதியன்று (நாளை) நாட்டின் மிகப்பெரிய ஆடம்பர ஷாப்பிங் இடமான ஜியோ வேர்ல்டு பிளாசா திறக்க உள்ளது. ஜியோ வேர்ல்டு பிளாசா மாலில் கார்டியர், பல்கேரி, லூயிஸ், உய்ட்டன், டியோர், குஸ்ஸி, ஐ.டபுள்யூ.சி. ஷாஃப்ஹவுசென் மற்றும் லக்கேஜ் தயாரிப்பான ரிமோவா உள்ளிட்ட பல பிரபலமான பிராண்டுகளின் ஷோரூம்களை திறக்க உள்ளது.
ஜியோ வேர்ல்டு பிளாசாவில் ஒரு ஷோரூம்-க்கான மாத வாடகையை பற்றி கேட்டால் நமக்கு ஷாக் அடிக்கும், ஏன்னா வாடகை தொகை அப்படி. உதாரணமாக, ஜியோ வேர்ல்டு பிளாசாவில் தனது ஷோரூமை திறக்கும் உலகின் 2வது மெகா கோடீஸ்வரரான பெர்னார்ட் அர்னால்டுக்கு சொந்தமான லூயிஸ் உய்ட்டன் (LVMH) நிறுவனம் மாத வாடகையாக ரூ.40 லட்சம் செலுத்தும் என்று கூறப்படுகிறது.
ஜியோ வேர்ல்டு பிளாசாவில் கடையெடுத்துள்ள டியோர், தனது கடைக்கு மாத வாடகையாக ரூ.21 லட்சம் செலுத்தும் என்றும், செக்யூரிட்டி டெபாசிட்டாக ரூ.1.39 கோடியை செலுத்த உள்ளதாகவும் தகவல்.
இந்த மாலில் திருமண வரவேற்பு, வி.ஐ.பி. வரவேற்பு போன்றவை நடத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது. இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த மாலாக ஜியோ வேர்ல்டு பிளாசா இருக்கும். நம் நாட்டில் தற்போது டி.எல்.எஃப். எம்போரியா, தி சாணக்யா, யு.பி. சிட்டி மற்றும் பீனிக்ஸ் பல்லேடியம் உள்ளிட்ட சில பிரத்யேக ஆடம்பர ஷாப்பிங் இடங்கள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications