ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மாபெரும் விரிவாக்கம் திட்டத்தில் இருந்தாலும் தனது சந்தை மதிப்பீட்டை அதிகரிப்பதில் குறியாய் உள்ளது. இதை அடிப்படையாக வைத்து தான் நியூ எனர்ஜி துறைக்கான முதலீடு, விரிவாக்கம் ஆகியவற்றை செய்ய முடியும், ரிலையன்ஸ்-க்கு எப்படி ஜியோ எண்ணெய் வர்த்தகத்திற்கு மாற்றாக இருந்ததோ, அடுத்த முக்கிய துறையாக நியூ எனர்ஜி இருக்க போகிறது.
இதேவேளையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தை பங்குச்சந்தையில் தனியாக பிரித்து பட்டியலிடும் திட்டத்தில் தீவிரமாக உள்ளது. இதற்காக ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் கூடுதலாக 8 முதல் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 8 முதல் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்வது மூலம் நிதி ஆதாரம் விரிவாக்கம், கடன் சுமை குறைத்தல் ஆகியவை நடக்கும் என தெரிகிறது. இந்த 10 சதவீதம் வரையிலான பங்கு விற்பனை அடுத்த 12- 15 மாதங்களில் நடக்கும் என்றும், அதன் பின்பு ஐபிஐ அல்லது டிமெர்ஜர் இருக்கும் எனவும் கணிக்கப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் 1 சதவீத பங்குகளை கத்தார் முதலீட்டு ஆணையத்திற்கு 8,278 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது மூலம் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவு 8.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டை பெற்றுள்ளது. அதாவது கிட்டதட்ட 100 பில்லியன் டாலர் மதிப்பீட்டை பெற்றுள்ளது, தற்போது திட்டமிட்ட 8-10 சதவீத பங்குகள் விற்பனை மூலம் சுமார் 84000 கோடி ரூபாய் அளவிலான நிதி திரட்ட கூடும்.
இந்திய முதலீட்டு சந்தைக்கு இவ்வளவு பெரிய நிறுவனம் ஈர்த்துக்கொள்ளுமா என்ற கேள்வி உள்ளது, இதனாலேயே பங்கு இருப்பை பெரிய அளவில் குறைக்க திட்டமிட்டு உள்ளது முகேஷ் அம்பானி நிர்வாகம். மேலும் இந்திய சட்ட விதிகள் படி ஒரு நிறுவனம் ஐபிஓ வெளியிட வேண்டுமாயின் குறைந்தது 25 சதவீத பங்குகள் பொது சந்தை முதலீட்டாளர்களிடம் இருக்க வேண்டும்.
தற்போது ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் நிறுவனத்திடம் கிட்டதட்ட 11 சதவீத பங்குகள் மட்டும் வெளி முதலீட்டாளர்களிடம் உள்ளது, எஞ்சியுள்ள 89 சதவீத பங்குகள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் பங்குச்சந்தைக்கு வர வேண்டுமாயின் சுமார் 14 சதவீத பங்குகளை விற்க வேண்டும், இதன் இன்றைய மதிப்பு 1.15 லட்சம் கோடி ரூபாய்.
இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் நிறுவனத்துடையது, எல்ஐசி ஐபிஓ அளவு மட்டுமே 20,557 கோடி ரூபாய். இந்த நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும்...
கடைசி ஆப்ஷனாக 20 சதவீத பங்குகளை தற்போது இருக்கும் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்துவிட்டு 5 சதவீத பங்குகளை ஐபிஓ-வில் விற்பனை செய்தாலும் 41000 கோடி ரூபாய் ஐபிஓ-வாக இது இருக்கும். இந்திய சந்தைக்கு இது ஏற்புடையதாக இருக்குமா..?
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications