அம்பானிக்கு கைகொடுத்த கச்சா எண்ணெய்.. 3 மாதத்தில் ரூ.2.43 லட்சம் கோடி வருமானம்..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இக்காலாண்டில் சிறப்பான செயல்பாட்டைப் பதிவு செய்தது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. வியாழக்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1.82 சதவீதம் உயர்ந்து 1,275 ரூபாயாக உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த நிதியாண்டின் டிசம்பர் காலாண்டை விட 7% அதிகரித்து ரூ.18,540 கோடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் இக்காலாண்டில் ஆப்ரேட்டிங் வருவாய் 7% அதிகரித்து ரூ.2.43 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது ரிலையன்ஸ்-ன் எண்ணெய் வர்த்தகம், ஜியோ, ரீடைல் பிரிவு வர்த்தகத்தையும் உள்ளடக்கியது.

அம்பானிக்கு கைகொடுத்த கச்சா எண்ணெய்.. 3 மாதத்தில் ரூ.2.43 லட்சம் கோடி வருமானம்..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் EBITDA இக்காலாண்டில் கிட்டத்தட்ட 8% அதிகரித்து ரூ.48,003 கோடியாக உயர்ந்துள்ளது. லாப விகிதம் 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 18% ஆக உயர்ந்துள்ளது. ஆனால் தேய்மான செலவுகள் (Depreciation) கடந்த ஆண்டின் இதே காலாண்டை ஒப்பிடுகையில் 2% அதிகரித்து ரூ.13,181 கோடியாக உயர்ந்துள்ளது முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

ஜியோ, ரீடைல் மற்றும் ஆயில்-டு-கெமிக்கல்ஸ் (O2C) உள்ளிட்ட அனைத்து முக்கிய வணிகத் துறைகளிலும் வலுவான செயல்பாடு காரணமாக இந்த காலாண்டில் சிறப்பான செயல்பாட்டை முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பதவி செய்துள்ளது. சுத்திகரிப்பு லாபம் சரிவில் இருந்து மீண்டு வந்துள்ள காரணத்தால் O2C பிரிவின் லாபம் பெரும் பங்கீட்டைக் கொடுத்துள்ளது.

ரிலையன்ஸ் ஓ2சி வணிகம்: கடந்த சில காலாண்டுகளாகப் பலவீனமாக இருந்து இப்பரிவின் வர்த்தகம் 3ஆம் காலாண்டில் ஆரோக்கியமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இப்பிரிவின் EBITDA 2% அதிகரித்து ரூ.14,402 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த பிரிவின் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 6% அதிகரித்து ரூ.1.49 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

டிசம்பர் காலாண்டில் உள்நாட்டு எரிபொருள் ரீடைல் விற்பனை அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. பெட்ரோல் விற்பனை 43.7% மற்றும் டீசல் விற்பனை 22.8% அதிகரித்துள்ளது என்று ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மூன்றாவது காலாண்டில் உலகளாவிய சுத்திகரிப்பு கச்சா எண்ணெய் மீதான லாபம் வருடாந்திர லாபம் 0.75 mb/d அதிகரித்து 81.75 mb/d ஆக இருந்தது. இருப்பினும், உலகளாவிய பயன்பாட்டு விகிதம் குறைந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+