ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வருடாந்திர கூட்டம் இன்று நடக்கும் நிலையில் முதலீட்டாளர்கள் பல்வேறு திட்டங்கள் குறித்து எதிர்பார்த்து காத்திருந்தாலும், அனைத்து தரப்பு முதலீட்டாளர்களின் கவனம் அனைத்தும் இந்த ஒரு அறிவிப்புக்காக தான். அப்படி என்ன அறிவிப்பு..?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான அறிவிப்பு இன்று வெளியாகும் என கணிக்கப்பட்டு உள்ளது. எதிர்காலம் எனில் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் அதிகாரம் யாருடைய கையில் செல்ல உள்ளது என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் அல்லது இதற்கான பாதை தேர்வு செய்யும் அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் தலைவர் முகேஷ் அம்பானி 2029 ஆம் ஆண்டு வரையில் இக்குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக அடுத்த ஐந்தாண்டு காலம் தொடர பங்குதாரரின் ஒப்புதலுக்கு நிர்வாக குழு ஆகஸ்ட் மாத துவக்கத்தில் சமர்ப்பித்தது அனைவருக்கும் தெரியும்.
முகேஷ் அம்பானி நியமிப்பதில் எவ்விதமான பிரச்சனையும் இருக்காது என்பதுல அனைவருக்கும் தெரியும், ஆனால் பிரச்சனை அங்கு இல்லை. 66 வயதான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தொடர சட்டப்படி 70 வயது வரையில் மட்டுமே அனுமதி உள்ளது.
இந்த நிலையில் அடுத்த 5 வருடம் முகேஷ் அம்பானி தொடர் வேண்டுமெனில் அதாவது அவருடைய 71 வயது வரையில் இப்பணியை தொடர கட்டாயம் சிறப்பு தீர்மானம் தேவை. இப்படியிருக்கையில் 5 வருடத்திற்கு பின்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தின் தலைவர் யார்..?
ஒருப்பக்கம் முகேஷ் அம்பானி வாரிசுகளாக ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ தலைவராக இருக்கிறார், ஈஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடைல் தலைவராக உள்ளர், அனந்த் அம்பானி நியூ எனர்ஜி பிரிவை நிர்வாகம் செய்து வருகிறது, நீதா அம்பானி ரிலையன்ஸ் பவுண்டேஷன், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி பணிகளை நிர்வாகம் செய்து வருகிறார்.
இப்படியிருக்கையில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் டிமெர்ஜர்-ஐ பெரும் வெற்றியாக பார்க்கப்படும் வேளையில் ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடைல் ஐபிஓ வெளியிட திட்டமிட்ட மிட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கும் வேளையில், யாருக்கு அதிகாரம் என்ற ஒரு அறிவிப்பில் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் எதிர்காலம் அடங்கியுள்ளது.
இந்த போட்டியில் ஆகாஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானி மத்தியில் பெரும் போட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரிலையன்ஸ் ரீடைல் அதிக மதிப்பீட்டை கொண்டு இருக்கும் காரணத்தால் ஈஷா அம்பானியின் கை ஓங்கியுள்ளது. ஆனால் ஈஷா அம்பானிக்கு திருமணமாகியிருக்கும் காரணத்தால் உயர்மட்ட அதிகாரம் கொடுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நீங்க என்ன நினைக்கிறீங்க..? ஆகாஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானி மத்தியில் யாருக்கு அளிக்கப்பட வேண்டும்..?
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications