மக்கள் இப்போது விரைவான மற்றும் சொகுசான பயணத்தை விரும்ப தொடங்கி விட்டனர், இதனால் அனைத்து தரப்பினரும் கார் வாங்கி வருகின்றனர். கார் தயாரிப்பு நிறுவனங்களும் தற்போது வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் ஜி.பி.எஸ். உள்பட பல்வேறு சிறப்பம்சங்களை கார்களில் வைத்துள்ளனர்.
காரின் உரிமையாளர் வெளியே இருந்தாலும் ஸ்மார்ட்போன் வாயிலாக, கார் எங்கே இருக்கிறது, என்ஜின் ஹெல்த், டிரைவிங் செயல்திறன், கார் எங்கே போய் கொண்டிருக்கிறது போன்ற விஷயங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

அதேசமயம் ஒருவர் பழைய கார் அல்லது புதிய காராக இருந்தாலும் அடிப்படை மாடல் வண்டியை வைத்திருக்கிறார் என்றால் தற்போதுள்ள ஸ்மார்ட் அம்சங்கள் இருக்காது. இருப்பினும், ஜியோமோட்டிவ்-ன் சிறிய OBD சாதனம் மூலம் அந்த கார்களிலும் எந்தவித முக்கியமான ரீ வயரிங் செய்யாமல் ஸ்மார்ட் அம்சங்களை கொண்டு வரலாம், சாதாரண காரை ஸ்மார்ட் காராக மாற்றலாம்.
ப்ளக் மாடலில் இருக்கும் ஜியோ மோட்டிவ்வை காரின் ஸ்டீரியங் அருகில் உள்ள OBD போர்டுடன் இணைக்க வேண்டும். இதனை நாமே செய்ய முடியும்.
ஜியோ மோட்டிவ் 4ஜி ஜி.பி.எஸ். கண்காணிப்பு சப்போர்ட்டுடன் வருவதால், உங்கள் வாகனத்தை வேறொருவர் பயன்படுத்தும்போது, உங்கள் வாகனத்தின் இருப்பிடம், எங்கே செல்கிறது போன்றவற்றை கண்காணிக்கலாம்.
மேப்பில் எல்லைகளை அமைக்கலாம், இந்த எல்லைகளை வாகனம் கடக்கும் போது உங்கள் ஸ்மார்ட்போனுக்கு Alert வரும். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கார் ஆன் செய்யப்பட்டிருந்தால், அது பயனருக்கு அறிவிப்பை அனுப்பும். இதனால் காரின் உரிமையாளருக்கு தெரியாமல் யாரும் எடுத்து செல்ல முடியாது.
ஜியோ மோட்டிவில் இ சிம் உள்ளதால் இதற்காக தனி சிம் வாங்க வேண்டிய அவசியமில்லை. ஸ்மார்ட்போனில் ஏற்கனவே உள்ள மொபைல் டேட்டா திட்டத்துடன் டேட்டாவை இந்த சாதனம் பகிர்ந்து கொள்ளும்.
கார் விபத்து அல்லது திருடினால் கார் உரிமையாளருக்கு உடனடி எச்சரிக்கை அனுப்பும். ஜியோ மோட்டிவ் சாதனத்தின் விலை ரூ.4,999. எம்.ஆர்.பி. விலையான ரூ.11,999ஐ காட்டிலும் 58 சதவீதம் தள்ளுபடி விலையில் ரிலையன்ஸ் டிஜிட்டல் வெப்சைட் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications