இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் இன்று தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்று காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ள நிலையில், ஒட்டுமொத்த பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கூட்டமும் காத்துகிடக்கிறது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ல் வழக்கம் போல் முதலாவதாக ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. முகேஷ் அம்பானி மூத்த மகன் ஆகாஷ் அம்பானி தலைமையில் இயங்கி வருகிறது ரிலையன்ஸ் ஜியோ.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் லாபம் தொடர்ந்து உயர்ந்து வருவதாகத் திங்கள் கிழமை காலாண்டு முடிவில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் ஜியோவின் லாப அளவுகள் 13% அதிகரித்து ரூ.5,337 கோடியாக உள்ளது. இதே காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.25,959 கோடியாக உள்ளது.
லாபம்: கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.4,717 கோடியாக இருந்த லாபத்துடன் ஒப்பிடுகையில், மார்ச் 2024 காலாண்டில் 13% லாப உயர்வு பதிவாகியுள்ளது, ஜியோவின் வலுவான செயல்பாட்டைக் காட்டுகிறது.
இதேபோல் டிசம்பர் மாதம் முடிந்த காலாண்டில் ரூ.5,208 கோடியாக இருந்த லாபத்துடன் ஒப்பிடும்போது, கடந்த காலாண்டைக் காட்டிலும் 2.4% அதிகரித்துக் காணப்படுகிறது.

வருவாய்: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டின் இதே மார்ச் காலாண்டில் ரூ.23,394 கோடியாக இருந்த வருவாய், இந்த ஆண்டு 11% உயர்ந்து ரூ.25,959 கோடியாக உள்ளது.
அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.25,368 கோடியாக இருந்த வருவாயுடன் ஒப்பிடும் போது, மார்ச் காலாண்டில் 2.3% உயர்ந்து காணப்படுகிறது.
மேலும் 2024 நிதியாண்டின் முழு வருவாய் ரூ.1,00,577 கோடியாக உள்ளது, இது கடந்த ஆண்டின் ரூ.91,148 கோடியுடன் ஒப்பிடும்போது 10.3% அதிகரித்துள்ளது. இதேபோல் லாபமும் (PAT) கடந்த ஆண்டின் ரூ.18,207 கோடியிலிருந்து 12.4% உயர்ந்து ரூ.20,466 கோடியாக அதிகரித்துள்ளது.
இருப்பினும், லாப விகிதம் (net profit margin) கடந்த ஆண்டின் 17% உடன் ஒப்பிடும்போது பெரிதாக மாற்றமில்லாமல், 2024 நிதியாண்டில் இது 17.4% ஆக உள்ளது.
லாபம் உயர்ந்து வருவது மகிழ்ச்சியான செய்தி என்றாலும், ஜியோவின் கடன் சுமை அதிகரித்து வருவது முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்துகிறது. மார்ச் 31, 2024 ம் ஆண்டுடன் முடிந்த காலாண்டில், கடன்-ஈக்விட்டி விகிதம் (debt-to-equity ratio) 0.22 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இந்த விகிதம் 0.17% ஆகவும், டிசம்பர் மாதம் முடிந்த காலாண்டில் 0.19% ஆகவும் இருந்தது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications