இப்போது பெரும்பான்மையான சேவைகள் டிஜிட்டல் மயமாகி விட்டது. கையால் எழுத வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு ஆகிவிட்டது. பள்ளி குழந்தைகள் முதல் பணிபுரிபவர்கள் வரை அனைவரும் கம்ப்யூட்டரை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.
சொந்தமாக கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் இருந்தால் தான் ஒரு சில துறைகளில் வேலை கிடைக்கும் என்ற நிலை இப்பொது உள்ளது. இப்பம் நாம ஒரு நல்ல பிராண்ட் லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூ.50,000 இருந்தால் தான் நடக்கும்.

இவ்வளவு ரூபாய் கொடுத்து வாங்குவது பலருக்கும் கடினம். ஆனால் நம்ம முகேஷ் அம்பானி இருக்கும் வரை நாம கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு கிளவுட் லேப்டாப்பை உருவாக்கி வருகிறது. இதன் விலை ரூ.15,000 என்ற அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் குறைந்த விலையில் சொந்தமாக லேப்டாப் எளிதாக வாங்கலாம்.
கிளவுட் லேப்டாப் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவது தொடர்பாக தற்போது ஏசர், எச்.பி., லெனோவா போன்ற முன்னணி கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்களுடன் முகேஷ் அம்பானி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சில மாதங்களில் கிளவுட் லேப்டாப் சந்தைக்கு விற்பனைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கிளவுட் லேப்டாப்க்கான சோதனைகள் எச்.பி.குரோம்புக்கில் நடத்தப்படுகின்றன. இது ஜியோவின இரண்டாவது லேப்டாப்பாக இருக்கும்.
கடந்த ஜூலை மாதம் ஜியோ நிறுவனம் ரூ.16,499 விலையில் ஜியோ புக்கை அறிமுகம் செய்தது. ஜியோபுக் லேப்டாப் ஜியோஓஎஸ் இயங்குளத்தை அடிப்படையாக கொண்டது. ஆனால் புதிய லேப்டாப் (கிளவுட் பி.சி.) வின்ட்டோஸ் உள்பட பிற ஓ.எஸ்.க்களில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ நிறுவனம் கிளவுட் லேப்டாப்க்கான மாதாந்திர சந்தாவை வழங்க முடிவு செய்துள்ளது. ஜியோவின் கிளவுட் லேப்டாப் விற்பனையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications