டாடா, பிர்லா-க்கு போட்டியாக ரிலையன்ஸ்.. நல்லி, போத்தீஸ் உடன் எதிர்பார்க்காத கூட்டணி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் ஆடை விற்பனை பிரிவில் ஏற்கனவே பல ஆயிரம் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கும் நிலையில், பெரும் நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை ஆன்லைன் தளத்தில் விரிவாக்கம் செய்து வருவதோடு, தற்போது அடுத்தடுத்து புதிய துறையில் விரிவாக்கம் செய்து வருவதால், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மிக முக்கியமான பிராண்ட் உடன் ரிலையன்ஸ் கூட்டணி வைத்துள்ளது எதிர்பார்க்காத டிவிஸ்ட் ஆக உள்ளது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இந்தியாவில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் கீழ் இருக்கும் ரிலையன்ஸ் டிரென்ஸ் பிரிவு மூலம் ஆடை விற்பனையில் சிறந்து விளங்குவது மட்டும் அல்லாமல் ஆன்லைன் வர்த்தகத்திற்காக AJIO என்ற ஆன்லைன் தளத்தையும் வைத்துள்ளது.

ரிடைல் முதலீடுகள்

ரிடைல் முதலீடுகள்

ரிலையன்ஸ் தனது ஆடை வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய ஜிவாமே உட்படப் பல நிறுவனங்களில் முதலீடு செய்து வர்த்தகத்தையும், நிறுவனங்களையும் கைப்பற்றிக் கொடிகட்டிப் பறந்து வருகிறது.

ரிலையன்ஸ் ரீடைல் புதிய பிராண்ட்

ரிலையன்ஸ் ரீடைல் புதிய பிராண்ட்


இந்த நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் பாரம்பரிய ஆடைகள் மற்றும் புடவை விற்பனையில் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்பதற்காகவும், இப்பிரிவில் குறிப்பிட்ட அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தும் டாடா குரூப்-ன் தனிஷ்க் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஆதித்யா பிர்லா பேஷன் ரீடைல் நிறுவனத்திற்குப் போட்டியாக, இந்தியா முழுவதும் Avantra என்ற புதிய பிராண்ட் பெயரில் ரீடைல் கடைகளைத் திறக்க முடிவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி.

டாடா குழுமத்தின் தனிஷ்க்

டாடா குழுமத்தின் தனிஷ்க்

டாடா குழுமத்தின் தனிஷ்க் இந்தியாவில் தங்கம், வெள்ளி, வைர நகைகளை விற்பனை செய்யும் ethnic wear பிராண்ட், ஏற்கனவே ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் ரிலையன்ஸ் ஜூவல் நிறுவனம் உள்ளது, அதேபோல் உலகின் முன்னணி நகை பிராண்டான Tiffany பிராண்ட் உடன் ரிலையன்ஸ் இந்திய வர்த்தகத்திற்காகக் கூட்டணி வைத்துள்ளது.

ஆதித்யா பிர்லா-வின் பேஷன் ரீடைல்

ஆதித்யா பிர்லா-வின் பேஷன் ரீடைல்

ஆதித்யா பிர்லா பேஷன் ரீடைல் நிறுவனம் பாரம்பரிய ஆடைகள் மற்றும் டிசைனர் பிராண்ட் ஆடைகள் விற்பனை செய்யும் பொருட்டும், இந்தியாவில் மிகவும் பிரபலமான Sabyasachi மற்றும் Tarun Tahiliani ஆகியவற்றுடன் கூட்டணியும் முதலீடும் செய்தது.. இதற்கு ஈடாக ரிலையன்ஸ் தனது ஆடை குறிப்பாகப் பாரம்பரிய ஆடை விற்பனைக்காகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லி மற்றும் போத்தீஸ் உடன் கைகோர்த்துள்ளது.

நல்லி மற்றும் போத்தீஸ்

நல்லி மற்றும் போத்தீஸ்

ரிலையன்ஸ் Avantra பிராண்ட் ஆடை விற்பனைக்காகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லி மற்றும் போத்தீஸ் மட்டும் அல்லாமல் பல மூன்றாம் தரப்புக் கடைகள் உடனும், பிராந்திய அடிப்படையிலான நெசவாளர்கள் கூட்டமைப்பு உடன் கூட்டணி வைத்து வர்த்தகத்தைத் துவங்க உள்ளது. ஆனால் இந்தக் கூட்டணிகளில் மிகவும் முக்கியமான பிராண்ட் என்றால் நம்ம ஊரு நல்லி மற்றும் போத்தீஸ் தான் எனக் கூறப்படுகிறது.

Avantra பிராண்ட்

Avantra பிராண்ட்

ரிலையன்ஸ் ரீடைல் தற்போது Avantra பிராண்ட் கீழ் நகைகள், ஆக்சஸரீஸ், ஆடைகள், மற்றும் டிசைனர் ஆடைகள் என அனைத்தையும் மக்களுக்கு ஓரே இடத்தில் அளிக்க வேண்டும் என்பதற்காக இப்புதிய பிராண்டை உருவாக்கியுள்ளது.

முதல் கடை பெங்களூர்

முதல் கடை பெங்களூர்

இந்தப் பிராண்டின் கீழ் முதல் கடை பெங்களூரில் வர உள்ளது. இதன் பின்பு கர்நாடகாவின் பிற பகுதிகள் மற்றும் ஆந்திரா பிரதேசம் முதற்கட்டமாக விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் பின்பு படிப்படியாக இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

பெண்கள் பாரம்பரிய உடை

பெண்கள் பாரம்பரிய உடை

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பெண்கள் பாரம்பரிய உடை விற்பனை சந்தை தொடர்ந்து 10 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இது மட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் தனது Avantra பிராண்ட் கடைகளை அடுத்த சில வாரத்தில் துவங்க உள்ள தீபாவளி மற்றும் பிற பண்டிகை காலத்தை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டு, விரைவில் விற்பனையைத் துவங்கத் திட்டமிட்டு உள்ளது.

ஆன்லைன் Vs ஆப்லைன்

ஆன்லைன் Vs ஆப்லைன்

ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் என்ன தான் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிகளவில் முதலீடு செய்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தாலும், தொடர்ந்து கடைகளை விரிவாக்கம் செய்து தான் வருகிறது. இதற்கு மிக முக்கியமான உதாரணம் Avantra பிராண்ட், இந்தப் பிராண்ட் முழுக்க முழுக்க brick-and-mortar chain கடைகளாகத் தான் உருவாக்கப்பட உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance New Brand 'Avantra' to take on TATA and Birla in Ethnic wear and Fashion space

Reliance New Brand 'Avantra' to take on TATA and Birla in Ethnic wear and Fashion space
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X