ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வர்த்தக பிரிவினை தொடர்ந்து விரிவாக்கம் செய்யும் விதமாக , பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை வாங்கி குவித்து வருகின்றது. பல்வேறு நிறுவனங்களையும் கையகப்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் ரிலையன்ஸ் ரீடெயில் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனம், லோட்டஸ் சாக்லேட்டின் 51% பங்குகளை , 74 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
புரோமோட்டர்களிடம் இருந்து வாங்கிய பங்கு
ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வர்த்தக குழுமமான ரிலையன்ஸ் கன்சியூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான, ரிலையன்ஸ் ரீடெயில் வென்சர்ஸ் லிமிடெட், லோட்டஸ் சாக்லேட் நிறுவனத்தின் பங்கினை வாங்கியுள்ளது.
இந்த சாக்லேட் நிறுவனத்தின் தற்போதைய புரோமோட்டர்களான, பிரகாஷ் பி பாய் மற்றும் ஆனந்த் பி பாயிடமிருந்து 74 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
சாக்லேட் நிறுவனத்தில் முதலீடு
ரிலையன்ஸ் கன்சியூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், லோட்டஸ் சாக்லேட் நிறுவனம் 65,48,935 ஈக்விட்டி பங்குகளை அல்லது 51% பங்குகளை வாங்கியுள்ளது.
இந்த பங்கு விலை ஒரு பங்குக்கு 113 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் 74 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
உற்பத்தியினை அதிகரிக்க திட்டம்
லோட்டஸ் நிறுவனம் பொது பங்குதாரர்களுக்கு 26% திறந்த சலுகையையும் அறிவித்துள்ளது. லோட்டஸில் செலுத்தப்படும் மூலதனமானது, அதன் வணிகத்தினை விரிவாக்கம் செய்ய பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தின்பண்டங்கள், கோகோ, சாக்லேட் மற்றும் பல நுகர்வோர் சந்தையில் தொடர்புடைய தயாரிப்புகளை உற்பத்தி செய்ய இது உதவும்.
மிக்க மகிழ்ச்சி
இது குறித்து ரிலையன்ஸ் அறிக்கையில், விடாமுயற்சியின் மூலம் வலுவான சாக்லேட் வணிகத்தினை உருவாக்கிய, லோட்டஸ் உடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதன் மூலம் உயர் தரமான தயாரிப்புகளை உருவாக்குவதற்கும், பரந்த அளவில் மலிவு விலையில் சேவையினை வழங்கவும் இது உதவும்.
ரிலையன்ஸ் ரீடெயில் லாபம்
ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இந்த இணைந்து வணிகத்தில் ஈடுபடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில், 36% அதிகரித்து, 2305 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அம்பானிக்கு சொந்தமான சில்லறை வணிக சங்கிலியின் மொத்த காலாண்டு வருவாய் 64.920 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும், 42.9% அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் ரீடெயில் எபிட்டா விகிதம் சாதனை படைத்துள்ளது. இது ஆண்டுக்கு 51.2% அதிகரித்து, 4404 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications