அர்பன் லேடர் நிறுவனத்தைக் கைப்பற்றியது ரிலையன்ஸ்.. இனி சிங்க பாதை தான்..!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது டிஜிட்டல் மற்றும் ஈகாமர்ஸ் வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வரும் நிலையில், புதிய துறையில் வர்த்தகத்தைத் துவங்கும் முயற்சியில் ஒவ்வொரு துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்களைக் கைப்பற்றித் தனது டிஜிட்டல் தளத்தில் வர்த்தகத்தை இணைத்து வருகிறது.

இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ஆன்லைன் வர்த்தகப் பிரிவில் பர்னிச்சர் வர்த்தகத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதற்காகக் கடந்த சில மாதங்களாகவே அர்பன் லேடர் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதன் படி பேச்சுவார்த்தை உறுதியாகி அர்பன் லேடர் ஹோம் டெக்கார் சொல்யூஷன் நிறுவனத்தின் 96 சதவீத பங்குகளை 182.12 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட்.

100% பங்குகள்

100% பங்குகள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அர்பன் லேடர் நிறுவனத்தில் 96 சதவீத பங்குகளை 182.12 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ள நிலையில் மீதமுள்ள 4 சதவீத பங்குகளைக் கைப்பற்றும் திட்டத்துடன் இரு நிறுவனங்கள் மத்தியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

முதலீடு திட்டம்

முதலீடு திட்டம்

அர்பன் லேடரை கைப்பற்றியது மட்டும் அல்லாமல் வர்த்தக விரிவாக்கத்தைச் செய்யவும், தனது ஜியோ தளத்தின் மூலம் நாடு முழுவதும் வர்த்தகத்தைச் செய்யும் அளவிற்குத் தளத்தை மேம்படுத்த சுமார் 75 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்ய ரிலையன்ஸ் ரீடைல் பிரிவு வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்த முதலீடு 2023ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்குள் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

 

ஆன்லைன் பர்னிச்சர்

ஆன்லைன் பர்னிச்சர்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அர்பன் லேடர் நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் ஆன்லைன் பர்னிச்சர் துறைக்குள் நுழைந்துள்ளதால், தற்போது இத்துறையில் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை இணைக்கவும், பெரும் நிறுவனங்களுடன் கூட்டணி சேரும் முடிவில் இறங்கியுள்ளது.

இதனால் ஆன்லைன் பர்னிச்சர் துறை தற்போது முக்கியக்கட்டத்தில் உள்ளது.

 

மதிப்பில் சரிவு

மதிப்பில் சரிவு

ஆன்லைன் பர்னிச்சர் சந்தை தற்போது பிளிப்கார்ட், அமேசான், பெப்பர் ப்ரை ஆகிய நிறுவனங்கள் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அர்பன் லேடர் நிறுவனத்தின் லாபம் சரிந்த இந்நிறுவனத்தின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

2018ஆம் ஆண்டு 1,200 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு செய்யப்பட்ட அர்பன் லேடர் 2019ல் 750 கோடி ரூபாய்க்கு குறைந்துள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+