இந்தியாவின் 2வது பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி அடுத்தடுத்து பல துறையில் புதிதாக இறங்கினாலும், தனது பழைய வர்த்தகத்தைத் தொடர்ந்து வலிமைப்படுத்த வேண்டும் என்பதில் குறியாய் இருக்கிறது முகேஷ் அம்பானி தலைமையிலான நிர்வாகம்.
ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் கிரீன் எனர்ஜி துறைக்குள் முழுமையாக நுழையும் முன் வளர்ந்து வரும் ரீடைல் வர்த்தகத்தைப் புதிய உயரத்திற்குக் கொண்டு வர திட்டமிட்டு 2022 ஆம் ஆண்டில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்துள்ளார் முகேஷ் அம்பானி.
ஏற்கனவே ஜியோ நிறுவனத்தின் நிர்வாகம் ஆகாஷ் அம்பானி கையில் சென்றுள்ள நிலையில், தற்போது ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தை ஈஷா அம்பானி கையில் ஒப்படைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
ரிலையன்ஸ் ரீடைல்
ரிலையன்ஸ் ரீடைல் 2022 ஆம் நிதியாண்டில் மட்டும் கடைகளை விரிவாக்கம் செய்யவும், நிறுவனங்களைக் கைப்பற்றவும், வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், புதிய கூட்டணி உருவாக்கவும் சுமார் 30000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.
30000 கோடி ரூபாய்
30000 கோடி ரூபாய் என்றால் நாட்டின் முன்னணி ரீடைல் நிறுவனமான டிமார்ட் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் -ன் வருடந்திரா விற்பனை அளவு, இது மட்டுமா அடுத்த 5 வருடத்தில் டாடா-வின் டிரென்ட், ஆதித்யா பிர்லா பேஷன்ஸ் & ரீடைல், ஷாப்பர்ஸ் ஸ்டாப், ஸ்பென்சர் ரீடைல், வி மார்ட் ரீடைல் ஆகிய நிறுவனங்களின் மொத்த வருவாயில் 70 சதவீதம்.
நிறுவன கைப்பற்றல்
ரிலையன்ஸ் ரீடைல் 2022 ஆம் நிதியாண்டில் நிறுவன கைப்பற்றல் மற்றும் வர்த்தகக் கூட்டணிக்காகச் சுமார் 9700 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதில் போர்ட்டிகோ, மில்ஸ் பேஸ்கட், ஜஸ்ட் டயல், ரிது குமார், Amante, dunzo, ஜெய்சூர்யா, கலாநிகேத்தன், clovia ஆகிய நிறுவனங்கள் அடங்கும்.
ஷாப்பர்ஸ் ஸ்டாப்
இதேபோல் ரிலையன்ஸ் ரீடைல்-ன் சக போட்டி நிறுவனமான ஷாப்பர்ஸ் ஸ்டாப் நிறுவனம், புதிய கடைகள் திறப்புகள் மற்றும் இ-காமர்ஸ் வர்த்தகத்திற்காக FY22 இல் 255 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது என்று கூறியுள்ளது.
டாடா ட்ரெண்ட்
இதேபோல் டாடா குழுமத்தின் ட்ரெண்ட் ஒரு வெஸ்ட்சைட் ஸ்டோருக்கு சுமார் ரூ. 6-7 கோடி முதலீடு செய்வதாகவும், FY22 இல் 36 புதிய விற்பனை நிலையங்களைச் சேர்த்ததாகவும் கூறியுள்ளது.
BigBasket மற்றும் 1MG
டாடா நிறுவனம் கடந்த நிதியாண்டில் ₹11,872 கோடியை டாடா டிஜிட்டல் வர்த்தகப் பிரிவில் குவித்துள்ளது, இந்நிறுவனம் சூப்பர் செயலியான Tata Neu அறிமுகம் செய்தது மட்டும் அல்லாமல் BigBasket மற்றும் e-pharmacy நிறுவனமான 1mg ஆகியவற்றைக் கைப்பற்றியது.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சில்லறை வணிகத்தில் 2022ஆம் நிதியாண்டில் கிட்டத்தட்ட 8 மில்லியன் சதுர அடி ரீடைல் வர்த்தகத்திற்காகச் சேர்க்கப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல்
இதன் மூலம் மொத்த Retail Business space 41.6 மில்லியன் சதுர அடிக்கு மேல் சென்றுள்ளது. மேலும் ரிலையன்ஸ் ரீடைல் 2,500 புதிய கடைகளையும் 11.1 மில்லியன் சதுர அடி அளவிலான கிடங்குகள் இடத்தையும் 2022ஆம் நிதியாண்டில் சேர்த்துள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications