இந்தியாவிலேயே மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றாக இருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ரீடைல் பிரிவான ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (RRVL) நிறுவனம் தனது காலாண்டு, மற்றும் 2024ஆம் நிதியாண்டின் முடிவுகளை இன்று வெளியிட்டு உள்ளது.
மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் ஈஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் ஒருங்கிணைந்த லாபமாக ரூ.2,698 கோடியை பெற்றுள்ளதாகத் திங்கள் கிழமை வெளியிட்ட காலாண்டு முடிவுகளில் அறிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே மார்ச் காலாண்டில் ரூ.2,415 கோடியாக இருந்த லாபத்துடன் ஒப்பிடும்போது 11.7% உயர்ந்துள்ளது. குறிப்பிடத்தக்க விதமாக, நிறுவனத்தின் வருடாந்திர லாபம் முதன் முதலாக ரூ.10,000 கோடி என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது சாதனைப் படைத்துள்ளது.
கடந்த ஆண்டின் மார்ச் காலாண்டில் ரூ.61,559 கோடியாக இருந்த ஆப்ரேட்டிங் வருவாய், மார்ச் 2024 காலாண்டில் 9.8% அதிகரித்து ரூ.67,610 கோடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும், டிசம்பர் காலாண்டில் ரூ.74,373 கோடியாக இருந்த வருவாயுடன் ஒப்பிடும்போது, இந்தக் காலாண்டில் வருவாய் 9% குறைந்துள்ளது முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாகும்.
2024 முழு நிதியாண்டைப் பொறுத்தவரையில், ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.273,079 கோடியாக இருந்தது, இது கடந்த ஆண்டின் ரூ.230,931 கோடியுடன் ஒப்பிடும்போது சுமார் 40000 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

2024 ஆம் நிதியாண்டில் 1,840 புதிய கடைகளை ரிலையன்ஸ் ரீடைல் திறந்த நிலையில் மொத்த கடைகளின் எண்ணிக்கை 18,836 ஆக உயர்ந்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம் புதிதாக 15.6 மில்லியன் சதுரடி ஷாப்பிங் ஏரியா அதிகரித்து மொத்த ஷாப்பிங் ஏரியா 79.1 மில்லியன் சதுரடியாக அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் டிஜிட்டல் வணிக தளமான JioMart போன்றவை வளர்ச்சியடைந்து வருவது, மொத்த விற்பனையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் விற்பனை அதிகரித்து லாபமும் உயர்ந்துள்ளது. மேலும் மொத்த பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர் எண்ணிக்கை 30.40 கோடி ரூபாயாக உள்ளது, இது கடந்த வருடத்தைக் காட்டிலும் 22.2 சதவீதம் அதிகமாகும்.. மேலும் இந்த நிதியாண்டில் 126 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications