வெளிநாட்டு நிறுவனங்களின் மூக்கை உடைக்கும் ரிலையன்ஸ்..! #AZORTE

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கிய நிலையில் அனைத்து வர்த்தக மற்றும் ஷாப்பிங் மால்களில் மக்கள் கூட்டம் அலைமோதத் துவங்கியுள்ளது.

 

இந்த நிலையில் அதிகப்படியான மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே அடுத்தடுத்து புதிய பிராண்ட் பெயரில் புதிய கடைகளைத் திறந்து வருகிறது ரிலையன்ஸ் ரீடைல்.

இந்த முறை ரிலையன்ஸ் ரீடைல் வெளிநாட்டு பிராண்டுகளின் ஆதிக்கத்தைக் குறைக்கும் வகையில் ப்ரீமீயம் பேஷன் அண்ட் லைப்ஸ்டைல் கடையைத் திறந்துள்ளது.

மில்லினியல் மற்றும் GEN-Z தலைமுறை

மில்லினியல் மற்றும் GEN-Z தலைமுறை

இந்தியாவில் மிட் ப்ரீமியம் பிரிவு பேஷன் பொருட்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் உள்ளது, குறிப்பாக மில்லினியல் மற்றும் GEN-Z தலைமுறையினர் மத்தியில் ப்ரீமியம் இந்திய பிராண்ட் மற்றும் வெளிநாட்டுப் பிராண்டுகளுக்கு அதிகப்படியான வரவேற்பு உள்ளது.

டாடா - ZARA

டாடா - ZARA


இந்த நிலையில் சமீபத்தில் டாடா குழுமம் ZARA நிறுவனத்துடன் இணைந்து Zudio என்னும் பிராண்ட் கடையை உருவாக்கி மிட் ப்ரீமியம் பேஷன் ஆடைகள் மற்றும் லைப்ஸ்டைல் பொருட்களை விற்பனை செய்யத் துவங்கியுள்ளது. இப்படிப் பல வெளிநாட்டுப் பிராண்டுகள் இந்திய நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்து வருகிறது.

ரிலையன்ஸ் ரீடைல் AZORTE
 

ரிலையன்ஸ் ரீடைல் AZORTE

இப்பிரிவில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக ரிலையன்ஸ் ரீடைல் AZORTE என்னும் புதிய பிராண்டு கடையைத் திறந்துள்ளது. இந்தப் பிராண்டின் முதல் கடையைப் பெங்களூரில் எம்ஜி சாலையில் இருக்கும் MG-Lido Mall-லில் 18000 சதுரடியில் திறக்கப்பட்டு உள்ளது.

ப்ரீமியம் பிராண்டுகள்

ப்ரீமியம் பிராண்டுகள்


இந்தப் பிராண்ட் கடைகளில் இந்தியா மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ப்ரீமியம் பிராண்டுகளின் ஆடைகள், காலணிகள், பேஷன் பொருட்கள், ஹோம், பியூட்டி மற்றும் பல பொருட்களை விற்பனை செய்ய உள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் AZORTE பிராண்டு கடைகள் ஒரு high-street fashion ஆக விளங்கும்.

 பெங்களூர்

பெங்களூர்

பெங்களூரில் முதல் AZORTE கடையைத் திறந்த ரிலையன்ஸ் ரீடைல் அடுத்த 9 மாதத்தில் 30-40 கடைகளையும், அடுத்த 3 வருடத்தில் 300 கடைகளையும் திறக்க திட்டமிட்டு உள்ளது என ரிலையன்ஸ் ரீடைல் பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் பிரிவு சிஇஓ அகிலேஷ் பிரசாத் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Retail AZORTE new premium fashion and lifestyle store opens in bengaluru compete with ZARA

Reliance Retail AZORTE new premium fashion and lifestyle store opens in bengaluru compete with ZARA
Story first published: Thursday, September 29, 2022, 19:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X