இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டெலிகாம் மற்றும் ரீடைல் வர்த்தகம் தான் எதிர்காலம் என முடிவு செய்த நிலையில், இத்துறையில் 360 டிகிரியிலும் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பது மட்டும் அல்லாமல் தனது வர்த்தகத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது இலக்கு.
இதன்படி இந்திய ரீடைல் சந்தையில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் ரிலையன்ஸ் ரீடைல் தற்போது ஈஷா அம்பானி, முகேஷ் அம்பானியில் நிர்வாக கூட்டணியில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் ஏற்கனவே பல பொருட்களை பல்வேறு பிராண்டுகளின் கீழ் விற்பனை செய்து வரும் வேளையில், கடந்த ஆண்டு Independence என்னும் பிராண்ட் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களையும் தனது வர்த்தகத்தால் இணைக்க வேண்டும் என திட்டமிட்டு ஈஷா அம்பானி, மக்கள் தினமும் பயன்படுத்தும் சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், மசாலா பொருட்கள், அரிசி என அனைத்து அடிப்படை உணவு பொருட்களையும் தரமானதாகவும், மலிவான விலையிலும் Independence என்ற பிராண்டின் கீழ் விற்பனை செய்ய கடந்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் Independence பிராண்டின் வர்த்தக மாடலை பல மாதங்களாக குஜராத்தில் சோதனை செய்த ரிலையன்ஸ் ரீடைல் தற்போது ஓட்டுமொத்த வட இந்தியாவிற்கும் தனது Independence பிராண்டை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. Independence பிராண்ட் தற்போது அதானி வில்மார்-ன் fortune, மாரிகோ-வில் சபோலா, பதஞ்சலியின் Nutrela ஆகியவற்றுடன் போட்டிப்போட்டு வருகிறது.

இதன் மூலம் இனி வரும் காலக்கட்டத்தில் Independence பிராண்டின் பொருட்கள் குஜராத் மாநிலத்தில் மட்டும் அல்லாமல் பஞ்சாப், ஹரியானா, டெல்லி NCR, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலத்திலும் கிடைக்கும்.
சில மாதங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் ரீடைல் பர்சன்ல் கேர், ஹோம்கேர் பொருட்களையும் விற்பனை செய்வதாக அறிவித்து, சோப் மற்றும் துணி துவைக்கும் பவுடர்களை 30 முதல் 35 சதவீத குறைவான விலையில் விற்பனை செய்ய துவங்கியது. இதன் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் ஐடிசி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனங்களையும், Campa Cola அறிமுகம் மூலம் பெப்சி, கோகோ கோலா நிறுவனங்கள் உடன் போட்டிப்போட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications