இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மட்டுமே நம்பியிருக்க கூடாது, இதுலேயே இருந்தால் பெரிய அளவில் வளர்ச்சி அடைய முடியாது என்பதை உணர்ந்து 2013 முதல் மக்களுக்கு நேரடியாக பொருட்கள் மற்றும் சேவைகளை விற்க முடிவு செய்தார்.
B2C காட்டிலும் B2B வர்த்தகத்தில் அதிக லாபம் உள்ளது, இதேபோல் செலவுகளும் அதிகம் என்றாலும் நீண்ட காலம் நாடு முழுவதும் வர்த்தக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றால் கட்டாயம் B2B வர்த்தக தான் கைகொடுக்கும். இதற்காக உருவாக்கப்பட்டது தான் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல்.

இவ்விரு வர்த்தக பிரிவின் மீது பல லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை கொரோனா தொற்று காலத்தில் திரட்டிய முகேஷ் அம்பானி இப்போது இந்த முதலீட்டாளர்களுக்கு தங்களுடைய பணத்தை திரும்ப பெற்றவும், ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் மதிப்பை உயர்த்தவும் முக்கியமான முடிவை எடுத்துள்ளார். ரிலையன்ஸ் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 0.60 சதவீத உயர்வுடன் 1554.30 ரூபாய் அளவில் முடிந்துள்ளது.
முகேஷ் அம்பானி ஏற்கனவே டெலிகாம் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் ரிலையன்ஸ் ஜியோ-வை ஐபிஓ மூலம் பட்டியலிடுவதற்கான திட்டத்தை செயல்படுத்தி வரும் வேளையில், டிசம்பர் மாதம் டெலிகாம் சேவைக்கான கட்டணத்தை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஐபிஓ வெளியிடும் போது ரிலையன்ஸ் ஜியோ சிறப்பான லாப மார்ஜின் உடன் பட்டியலிடப்படும், இதன் மூலம் அதிகப்படியான மதிப்பீட்டையும், லாபத்தையும் பார்க்க முடியும். இதே கட்டமைப்பில் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவையும் கொண்டு வர முடிவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி.
இந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் வர்த்தக நிறுவனமாக உருவெடுத்திருக்கும் ரிலையன்ஸ் ரீடைல்-ஐ 2028ஆம் ஆண்டில் ஐபிஓ வெளியிட உயர்மட்ட நிர்வாக அளவில் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் வளர்ச்சி பயணத்தில் பெரிய மைல்கல் ஆகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டுமே பங்குச்சந்தையில் இருந்து வந்த நிலையில் நிதி பிரிவை ஜியோ பைனான்சியல் என தனியாக பிரித்து பெரும் வெற்றிக்கண்டது. இதே கட்டமைப்பில் தற்போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் ஆகியவற்றை பட்டியலிட முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் இது ஐபிஓ சீசன் ஆக இருக்கும் வேளையில், முகேஷ் அம்பானி அடுத்த 2 ஆண்டுக்குள் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவை ஐபிஓ-வுக்கு தயார் படுத்தும் விதிமாக ரிலையன்ஸ் ரீடைல் பிரிவை நிர்வாகம் செய்யும் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி அடுத்த 2 ஆண்டுகளில் கடை விரிவாக்கம், கடன் குறைப்பு, குவிக் காமர்ஸ் துறை வர்த்தகம் மேம்பாடு போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளார். இந்த நடவடிக்கைகள் IPOக்கு முன் நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுக்கு 2000 புதிய கடைகள்
ரிலையன்ஸ் ரீடைல் ஆண்டுக்கு சராசரியாக 2000 புதிய கடைகளை தொடங்க திட்டமிட்டு உள்ளது. செப்டம்பர் காலாண்டில் மட்டும் 412 கடைகள் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது ஆண்டுக்கு 2000 கடைகளை விரிவாக்கம் செய்ய உள்ளது ரிலையன்ஸ். இதேபோல் தற்போது நாடு முழுவதும் ரிலையன்ஸ் ரீடைல் கீழ் இயங்கும் பிராண்டுகளின் 19,821 கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த விரிவாக்கம் கடையின் வர்த்தகம் அதிகரித்து லாபத்தை உயர்த்தும், இதேபோல் சந்தை மதிப்பை அதிகரிக்கும்.
இதைவிட முக்கியமாக இந்தியாவில் தற்போது முக்கியமான வர்த்தகமாக மாறியிருக்கும் குவிக் காமர்ஸ் துறையில் பெரிய அளவில் இறங்க முடிவு செய்துள்ளது, இதற்காக நாட்டின் முக்கிய நகரங்களில் அதிகப்படியான டார்க் ஸ்டோர்கள் தொடங்கும் பணியில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது. இது நுகர்வோர் தேவையை விரைவாக பூர்த்தி செய்யும். அதேபோல் வர்த்தகத்தையும் அதிகரிக்கும்.
கடன் குறைப்பு
ஐபிஓ-வுக்கு முன்பு கடனற்ற நிறுவனமாக இருக்க வேண்டுமான என்ற திட்டம் அம்பானி குடும்பத்திற்கு இருப்பதாக கூறப்படவில்லை, ஆயினும் ரிலையன்ஸ் ரீடைல் தனது கடன் சுமையை பெரிய அளவில் குறைத்துள்ளது. 2025 நிதியாண்டில் இந்நிறுவனத்தின் நீண்டகால கடன் ரூ.53,546 கோடியில் இருந்து ரூ.20,464 கோடியாக குறைந்துள்ளது. இது நிறுவனத்தின் நிதி நிலையை வலுப்படுத்தும். IPOக்கு முன் கடன் குறைப்பு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை தரும் என்பதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்ற கேள்வியும் உருவாகியுள்ளது. மேலும் செப்டம்பர் காலாண்டில் மொத்த வருவாய் 18 சதவீதம் உயர்ந்து ரூ.90,018 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் 17 சதவீதம் உயர்ந்து ரூ.3,439 கோடியாகவும் உள்ளது.
பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு என்ன பயன்?
ரிலையன்ஸ் ரீடைல் IPO இந்திய பங்குச் சந்தையில் பெரிய நிகழ்வாக இருக்கும். குறிப்பாக ரிலையன்ஸ்-ன் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு இது மிகப்பெரிய ஜாக்பாட் ஆக அமையும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் ஏற்கனவே இதன் பயனை உணர்ந்துள்ளன. IPO பட்டியலிட்ட பிறகு ரிடைல் துறையில் புதிய போட்டி, வளர்ச்சி ஏற்படும். ரிலையன்ஸ் ரீடைல் ஏற்கனவே மெட்ரோ பிராண்ட் கடைகளை கைப்பற்றி மொத்த விற்பனையில் பெரும் சந்தை வர்த்தகத்தை வைத்துள்ளது. இதனால் நீண்ட கால அடிப்படையில் ரிலையன்ஸ் ரீடைல்-க்கு பெரிய வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications