முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் ஜூன் காலாண்டில் மொத்த லாபம் கடந்த வருடத்தை காட்டிலும் 11 சதவீதம் சரிந்து 16,011 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளது. இதேபோல் மொத்த வருவாய் 5.3 சதவீதம் வரையில் சரிந்து 2.11 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஜூன் காலாண்டில் ஈஷா அம்பானி மட்டும் இல்லையெனில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டு இருக்கும்.
ஜூன் காலாண்டில் ஈஷா அம்பானி தலைமை வகித்த ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் வர்த்தகம் மட்டும் இல்லையெனில் மிகவும் மோசமான வருவாய் மற்றும் லாப வளர்ச்சியை எதிர்கொண்டு இருக்கும். அப்போ முகேஷ் அம்பானி-யை காப்பாற்றிய மகள் ஈஷா அம்பானி என சொல்வது சரிதானே..!!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தில் O2C வர்த்தகத்திற்கு பின்பு அதிக வருவாய் பங்கீட்டை கொண்டு உள்ளது ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தக பிரிவு தான். ஜூன் காலாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் வருவாய் 20 சதவீதம் உயர்ந்துள்ளது, இதன் மூலம் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் ரீடைல் பிரிவின் வருவாய் 69,948 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் வரலாற்றில் 69,948 கோடி ரூபாய் வருவாய் அளவீடு தான் வராலாற்று உச்சம், இப்பிரிவின் வருவாய் மளிகை பொருட்கள், கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ், பேஷன், லைப்ஸ்டைல் பொருட்கள் விற்பனையில் அதிகப்படியான வருவாயை பெறுகிறது.

ஜூன் காலாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் EBITDA அளவு யாரும் எதிர்பார்க்காத வகையில் 34 சதவீதம் அதிகரித்து 5,139 கோடி ரூபாயாக உள்ளது, இதுவும் காலாண்டு அடிப்படையில் மிகவும் அதிகமானது. EBITDA மார்ஜின் அளவு 30 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 7.9 சதவீதமாக உள்ளது.
மேலும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் மொத்த லாபம் 19 சதவீதம் அதிகரித்து 2,448 கோடி ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications