இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமமான முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்தின், ரிலையன்ஸ் ரீடெயில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களில், உலகின் டாப் 10 சந்தை மதிப்புள்ள நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளது.
இவற்றின் சந்தை மதிப்பு முறையே 63 பில்லியன் டாலர் மற்றும் 58 பில்லியன் டாலர் ஆகும். இந்த நிறுவனங்கள் முறையே 6வது மற்றும் 7வது இடங்களை பெற்றுள்ளது.
இந்த நிறுவனங்கள் பில்லியனர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்கள் ஆகும்.
டாப் 10 நிறுவனங்கள்
இந்த டாப் 10 பட்டியலில் சீனாவின் டெக் நிறுவனமான பைட் டான்ஸ், நிதியியல் சேவை நிறுவனமான ஆண்ட் குழுமம் மற்றும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும்.
இந்த நிறுவனங்கள் ஹெக்டோகார்ன் அல்லது 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனங்கள் என்று கூறப்படுகின்றன.
பைட் டான்ஸ் மதிப்பு
டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸின் மதிப்பு 180 பில்லியன் டாலராகும். கடந்த 1 வருடத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் மதிப்பானது 40 பில்லியன் டாலர் எனும் அளவுக்கு அதிகரித்துள்ளது.
இதே ஜாக்மாவின் ஆன்ட் குழுமம் இந்த ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ்-ஐ இரண்டாவது இடத்தில் இருந்து தள்ளியுள்ளது. அலிபேயினை வைத்திருக்கும் ஆன்ட் குழுமத்தின் மதிப்பு 150 பில்லியன் டாலராகும்.
ஸ்பேஸ் எக்ஸ் மதிப்பு
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 125 பில்லியன் டாலராகும். கல்வி டெக் நிறுவனமான பைஜூஸ் இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனம் டாப் 10 நிறுவனங்களில் ஒன்றாக இல்லை. இதில் 18வது இடத்தை பிடித்துள்ளது. பைஜூவின் மதிப்பு 22 பில்லியன் டாலராகும்.
இந்திய ஸ்டார்ட் அப்களின் மதிப்பு
இதே உணவு தொழில் நுட்ப நிறுவனமான ஸ்விக்கி 6 பில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனம். இதே ஹாஸ்பிட்டாலிட்டி ஸ்டார்ட் அப் நிறுவனமாக ஓயோ 10 பில்லியன் டாலராகும். இதே ரோசர் பே நிறுவனத்தின் சந்தை மதிப்பு 7 பில்லியன் டாலராகவும், ரைட் ஹெய்லிங் பிளார்ட்பார்ம் நிறுவனமான ஓலாவின் 7 பில்லியன் டாலராகவும் உள்ளது. கிரெட் நிறுவனத்தின் மதிப்பு 6 பில்லியன் டாலராகவும், பார்ம் ஈஸி நிறுவனத்தின் மதிப்பு 6 பில்லியன் டாலராகவும் உள்ளது.
மூன்றாவது பெரிய நாடு
இந்தியாவில் உள்ள டெகாகார்ன் நிறுவனங்களில் பைஜூ மற்றும் ஓயோ நிறுவனங்கள் மட்டுமே அடங்கும். இது 10 பில்லியன் டாலர் அல்லது அதற்கு மேலாக அடங்கும்.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்த படியாக மூன்றாவது ஸ்டார்ட் அப் சுற்றுசூழலை கொண்ட மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது. இந்தியா மூன்றாவது பெரிய யூனிகார்ன்களை கொண்ட ஒரு நாடாகவும் உள்ளது. இதன் பங்கு சர்வதேச அளவில் 5.94% எனும் அளவுக்கு உள்ளது.


Click it and Unblock the Notifications