முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ரீடைல் வர்த்தகப் பிரிவான ரிலையன்ஸ் ரீடைல் ஆடம்பர மற்றும் டிசைனர் ஆடை வர்த்தகப் பிரிவை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இதற்காகக் கடந்த வாரம் முகேஷ் அம்பானி சினிமா மற்றும் ஆடம்பர் ஆடை வடிவமைப்பாளரான மனிஷ் மல்ஹோத்ரா நிறுவனத்தில் 40 சதவீத பங்குகளை வாங்கிய நிலையில் தற்போது அடுத்ததாகப் பிரபல ஆடை வடிவமைப்பாளர் நிறுவனத்தில் முதலீட்டுச் செய்து அதிகளவிலான பங்குகளைக் கைப்பற்றியுள்ளார்.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி அக்டோபர் மாதம் துவங்கியதில் இருந்து தொடர்ந்து நிறுவனத்தில் முதலீடு செய்வது, பங்குகளைக் கைப்பற்றுவது எனத் தீவிரமாக வர்த்தக விரிவாக்க பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
சோலார் வர்த்தகம்
இம்மாத துவக்கத்தில் தனது சோலார் மாடியூல் மற்றும் ஹைட்ரஜன் பியூயல் செல் உற்பத்தியை அதிகரிக்க நார்வே REC சோலார், இந்தியாவில் ஸ்டெர்லிங் வில்சன், ஜெர்மனி நெக்ஸ்வேஃப், டென்மார்க் Stiesdal ஆகிய நிறுவனத்தில் முதலீடும், பங்கு கைப்பற்றலில் ஈடுபட்டு வந்தார்.
ரிது குமார் பிராண்ட்
இந்நிலையில் தற்போது ரீடைல் ஆடை விற்பனை பிரிவில் மனிஷ் மல்ஹோத்ரா நிறுவனத்தைத் தொடர்ந்து ரீலையன்ஸ் ரீடைல் நிறுவனம் ரிது குமார் டிசைனர் ஆடை பிரிவில் 52 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் இந்திய ஆடம்பர ஆடை விற்பனையில் ரிலையன்ஸ் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த உள்ளது.
ரித்திகா
76 வயதான ரித்திகா -வின் பிரபலமான பிராண்டாக இருக்கும் ரிது குமார் நிறுவனத்தின் கீழ் இருக்கும் ரிது குமார், ரீ ரிது குமார், ஆர்கீ, ரிது குமார் ஹோம் அண்ட் லிவ்விங் ஆகிய பிராண்டுகளின் வர்த்தகத்தை ரிலையன்ஸ் கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே ரிது குமார் பிராண்டில் எவர்ஸ்டோன் வைத்திருந்த 35 சதவீத பங்குகளையும் கைப்பற்றியுள்ளது ரிலையன்ஸ்.
ஆதித்யா பிர்லா
இதன் மூலம் ரிது குமார் நிறுவனத்தின் கீழ் சுமார் 52 சதவீத பங்குகளையும் ரிலையன்ஸ் கைப்பற்றி ஆதித்யா பிர்லா கைப்பற்றிய Sabyasachi மற்றும் Jaypore பிராண்டுகளுடன் ரிலையன்ஸ் போட்டிப்போட முடியும்.
ரிலையன்ஸ் Avantra பிராண்ட்
இதேவேளையில் ரிலையன்ஸ் ரீடைல் இந்தியாவில் தனது பிராம்பரிய ஆடை விற்பனை மட்டும் விரிவாக்கம் செய்ய Avantra என்ற பிராண்டை உருவாக்கியுள்ளது. இப்புதிய பிரிவை விரிவாக்கம் செய்ய மனிஷ் மல்ஹோத்ரா மற்றும் ரிது குமார் பிராண்ட் பெரிய அளவில் உதவும்.


Click it and Unblock the Notifications