ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலையெழுத்தை மொத்தமாக மாற்றக்கூடிய வர்த்தகப் பிரிவாக உருவெடுத்திருக்கும் ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் குழுமம் தனது வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லவும், தனது சொந்த தயாரிப்புகளை ரீடைல் விற்பனை சந்தைக்குக் கொண்டு வரவும் முக்கியமான வர்த்தகத் தளத்தைத் தேடி வந்த நிலையில் ஜெர்மனி நாட்டின் மெட்டோ ஏஜி தனது இந்திய வர்த்தகப் பிரிவை விற்பனை செய்ய முடிவு செய்தது.
இந்த வாய்ப்பை விடக் கூடாது என முடிவு செய்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடுமையான போட்டிக்கு மத்தியில் பல மாத பேச்சுவார்த்தைக்குப் பின்பு மெட்ரோ நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட் வியாழக்கிழமை மெட்ரோ கேஷ் அண்ட் கேரி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை 2850 கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளதாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2850 கோடி ரூபாய் டீல்
மெட்ரோ இந்தியா வர்த்தகத்தைக் கைப்பற்ற இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் பல போராடியது குறிப்பாக டிமார்ட், அதானி குழுமம் போன்றவை முயற்சி செய்தது, ஆனால் கடைசிக் கட்டத்தில் வெளியேறியது.
மெட்ரோ இந்தியா
இந்த 2850 கோடி ரூபாய் ஒப்பந்தம் மூலம் மெட்ரோ இந்தியாவின் கடைகள், ஊழியர்கள், கட்டமைப்புகள் அனைத்தையும் மொத்தமாகப் பெற உள்ளது. ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ், மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனத்தைக் கைப்பற்றுவதைச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும், இதன் மூலம் மார்ச் 2023 க்குள் இந்த ஒப்புதல் பெற்று ரிலையன்ஸ் கட்டுப்பாட்டுக்கு வரும் எனக் கணிக்கப்படுகிறது.
மொத்த விற்பனை சந்தை
இந்தியாவின் மொத்த விற்பனை சந்தையில் டிஸ்ட்ரிபியூட்டர்கள் மட்டுமே ஆதிக்கம் செய்து வந்த நிலையில் மெட்டோ சிறு மற்றும் நடுத்தரக் கடைக்காரர்களை இணைக்கும் ஒரு ஹோல்சேல் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
புதிய பிராண்ட்
ரிலையன்ஸ் ரீடைல் தற்போது Independence என்ற பிராண்டை உருவாக்கிய நிலையில் மெட்ரோ-வை கைப்பற்றியது மிகவும் முக்கியமானதாக உள்ளது. ரிலையன்ஸ் ரீடைல் இந்தியா முழுவதும் சுமார் 16000 கடைகளை வைத்துள்ள நிலையில் மெட்ரோ வெறும் 31 கடைகளை மட்டுமே வைத்துள்ளது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் இது அனைத்தும் மொத்த விற்பனை கடைகள் என்பதால் அதிகப்படியான வர்த்தகத்தை உருவாக்க வாய்ப்புகள் உள்ளது.
60 லட்சம் கோடி ரூபாய்
இந்தியா சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை வர்த்தகத்தைக் கொண்டது என்பதால் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் ஈஷா அம்பானி FMCG துறையில் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கை உடன் Independence என்ற புதிய பிராண்ட்-ஐ உருவாக்கியுள்ளது.
ஈஷா அம்பானி
இந்தப் பிராண்ட் உடன் மக்களுக்குத் தினசரி தேவைப்படும் பொருட்கள் முதல் பிராசஸ் செய்யப்பட்ட உணவு பொருட்களைக் குறைவான விலையிலும், சிறந்த தரத்துடனும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications