ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம் அதன் இ-காமர்ஸ் பியூட்டி பிளார்ட்பார்மான Tira ஆப்பினை தொடங்கியுள்ளது. இது ஆஃப்லைன் ஸ்டோரினையும் விரைவில் தொடங்கலாம் என தெரிகிறது.
ஏப்ரல் மாதத்தில் மும்பையில் ரீடெயில் ஷாப் ஒன்றினை தொடங்கவுள்ளது. அதனை மெதுவாக தொடர்ந்து நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
என்னென்ன பொருட்கள் விற்பனை?
டிரா (Tira) அழகு சாதன பொருட்கள், ஸ்கின்கேர், ஹேர் கேர், குளியல் சம்பந்தமான பொருட்கள், வாசனை திரவியங்கள், ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள், ஆடம்பர பொருட்கள் என பலவற்றை வழங்கும் என தெரிகிறது.
தற்போது இந்த தளமானது ரிலையன்ஸ் ஊழியர்களிக்கும் திறக்கப்பட்டுள்ளது. இது விரைவில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ரீடெயில் தலைவர் கருத்து
இது குறித்து ரிலையன்ஸ் ரீடெயில் பிரிவில் தலைவர் சுப்ரமணியம் வி உறுதிபடுத்தியுள்ளார். டிரா ஆஃப்லைன் விரிவாக்கம் குறித்து கூறிய சுப்ரமணியம், ஏப்ரல் மாதத்தில் மும்பையில் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முடிவு செய்யப்படலை
எனினும் எத்தனை கடைகள் தொடங்கப்படும் என்பது குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை. ரிலையன்ஸ் ரீடெயில் கடைகள் ஏற்கனவே இந்தியா முழுவதும் போதுமான எண்ணிக்கையை கொண்டுள்ளது. ஆக இது மேற்கொண்டு எங்களது வணிகத்தினை விரிவாக்கம் செய்ய உதவிகரமாக இருக்கும். டிராவில் பிரீமியம் மற்றும் பிரீமியம் அல்லாத பிராண்டுகள் என எதெல்லாம் அடங்கும் என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை.
ஆடம்பர பொருட்கள்
டிராவின் வணிக நடவடிக்கைகளுக்கு மத்தியில் பல தொழில் நுட்ப முறையும் பயன்படுத்தப்படும் என தெரிகின்றது. இந்த டிராவில் ஆடம்பர பொருட்கள் என்பது TIRA RED எனும் பிரிவின் கீழ் விற்பனை செய்யப்படலாம். ஏற்கனவே இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளராக இருக்கும் ரிலையன்ஸ் ரீடெயில், அழகு சாதன பொருட்கள், ஹேர் கேர் , ஸ்கின் கேர், பர்சனல் கேர் என பலவும் அடங்கும். அந்த வகையில் டிரா இன்னும் முக்கிய பங்கு வகிக்கலாம்.
மொத்தத்தில் அழகு கலை பொருட்கள் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கான இந்த வணிகத்திலும் ரிலையன்ஸ் தனது சாம்ராஜ்ஜியத்தினை இன்னும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளதை இதன் மூலம் அறிய முடிகிறது. இது நய்கா போன்ற நிறுவனங்களுக்கு மேலும் போட்டியாக அமையலாம்.


Click it and Unblock the Notifications