இந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் விற்பனை நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ரீடைல் ஜனவரி 19 ஆம் தேதி முதலீட்டாளர்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.
மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் ரீடைல் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் வெறும் 0.01 சதவீதம் மட்டுமே உயர்ந்து 2,735.05 ரூபாய்க்கு முடிந்துள்ளது.

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் டிசம்பர் காலாண்டு முடிவில் மொத்த நிகர லாபத்தில் சுமார் 32 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்து சுமார் 3,165 கோடி ரூபாய் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2400 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் வருவாய் 24 சதவீதம் உயர்ந்து 74,373 கோடி ரூபாயாக உள்ளது.
இக்காலாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவு வர்த்தகத்தின் EBITDA அளவு 6,258 கோடி ரூபாயாக உள்ளது, இது கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 31 சதவீதம் அதிகமாகும். இக்காலாண்டில் EBITDA மார்ஜின் அளவு வருடாந்திர அடிப்படையில் வெறும் 40 அடிப்படை புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 8.1 சதவீதமாக உள்ளது.
ஈஷா அம்பானி தலைமையிலான ரீலையன்ஸ் ரீடைல் நிர்வாகம் தொடர்ந்து செலவுகளைக் கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வரும் காரணத்தால் EBITDA அளவு கணிசமாக உயர்ந்துள்ளது.
டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதிய கடைகள், சப்ளை செயின் கட்டமைப்புகளை மேம்படுத்திய காரணத்தால் அதிகப்படியான செலவுகளை எதிர்கொண்டு மதிப்பீட்டில் கணிசமான சரிவை எதிர்கொண்டு உள்ளது. இதேபோல் சில பிரிவுகளில் வட்டி விகிதம் உயர்வு மற்றும் கடன் ஆகியவற்றின் காரணமாக இழப்பை எதிர்கொண்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இக்காலாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் புதிதாக 252 கடைகளைத் திறந்துள்ளது, இதன் மூலம் மொத்த கடைகளின் எண்ணிக்கை 18,774 ஆக உயர்ந்து மொத்த கடை அளவு 72.9 மில்லியன் சதுரடியாக உயர்ந்துள்ளது. மேலும் டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் கடைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 282 மில்லியனாக உள்ளது, இது கடந்த வருடத்தைக் காட்டிலும் 40 சதவீதம் அதிகமாகும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications