பியூச்சர் ரீடைல் கடைகளைக் கைப்பற்றி வரும் ரிலையன்ஸ்.. ஊழியர்கள் மகிழ்ச்சியின் உச்சம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய வர்த்தகப் பரிமாற்றமாக விளங்கும் ரிலையன்ஸ் - பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் கைப்பற்றல் திட்டத்திற்கு எதிராக அமேசான் வழக்கு தொடுத்துள்ள நிலையில், இந்தியாவிலும், சிங்கப்பூரில் வருட கணக்காக நடந்து வரும் நிலையில் இன்றும் தீர்வு காணப்படாமல் உள்ளது.

 

இந்நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் ஸ்மார்ட்டாக யோசித்துப் பியூச்சர் ரீடைல் கடைகளை அடுத்தடுத்து கைப்பற்றி வருகிறது. இதை யாராலும் தடுக்க முடியாது என்பது தான் தற்போது முக்கியமான விஷயமாக உள்ளது.

 எல்ஐசி ஐபிஓ: வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. அப்போ இந்திய முதலீட்டாளர்கள்..?! எல்ஐசி ஐபிஓ: வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. அப்போ இந்திய முதலீட்டாளர்கள்..?!

 பியூச்சர் ரீடைல்

பியூச்சர் ரீடைல்

பியூச்சர் ரீடைல் வர்த்தகத்தை மொத்தமாக ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய இந்நிறுவன தலைவர் கிஷார் பியானி அமேசானுக்கு எதிராகத் தொடர்ந்து வழக்கு நடத்தி வந்தாலும். இன்னும் தீர்வு எட்டப்படவில்லை, சமீபத்தில் வெளிநாட்டு வங்கிகளிடம் பெற்ற கடனுக்கான வட்டியை பியூச்சர் ரீடைல் செலுத்தியது.

 200 கடைகள் மூடல்

200 கடைகள் மூடல்

இந்நிலையில் பியூச்சர் குரூப் பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் பல கடைகளின் ஒப்பந்தம் நிறைவடையும் நிலையில், ஒப்பந்தம் புதுப்பிக்க விருப்பம் இல்லாத நிலையில் 200க்கும் அதிகமான கடைகளைப் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இதேபோல் செலவுகளைக் குறைக்கப் பல கடைகளை மூடவும் முடிவு செய்துள்ளோம் எனப் பியூச்சர் ரீடைல் தெரிவித்துள்ளது.

 ரிலையன்ஸ் ரீடைல்
 

ரிலையன்ஸ் ரீடைல்

இந்த இடைவெளியை பயன்படுத்தி வாடகை ஒப்பந்தம் முடியும் பியூச்சர் ரீடைல் கடைகளை ரிலையன்ஸ் ரீடைல் கைப்பற்றத் துவங்கியுள்ளது. இதன் மூலம் பிக் பஜார் கடைகளின் பலகைகளைக் கழற்றப்பட்டு, ரிலையன்ஸ் ரீடைல் பலகைகள் மாட்டப்பட்டும், பிக் பஜார் கடை ஊழியர்களை ரிலையன்ஸ் ரீடைல் கடை ஊழியர்களாக மாற்றப்பட்டும் வருகிறது ரிலையன்ஸ் ரீடைல்.

 லீஸ் ஒப்பந்தம்

லீஸ் ஒப்பந்தம்

பியூச்சர் ரீடைல் நிறுவனம் சுமார் 1700 ரீடைல் விற்பனை கடைகளை இந்தியா முழுவதும் வைத்துள்ளது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள பியூச்சர் ரீடைல், தனது கடைகளுக்கு லீஸ் தொகை கொடுக்க முடியாத காரணத்தால் ஒப்பந்தம் ரத்துச் செய்யப்படுகிறது. இதனால் கடை உரிமையாளர்கள் வேறு நிறுவனத்திற்கும், வேறு பிராண்டுகளுக்கும் கடையை லீஸ்-க்கு அளிக்கிறது.

 ரிலையன்ஸ் மாஸ்டர் பிளான்

ரிலையன்ஸ் மாஸ்டர் பிளான்

இந்தக் கேப்-ஐ பயன்படுத்திக் கொண்ட ரிலையன்ஸ் ரீடைல், லீஸ் மூடியும் அனைத்து பியூச்சர் ரீடைல் கடைகளையும் கைப்பற்றி வருகிறது. இதை யாராலும் தடுக்கவும் முடியாது வழக்கும் போட முடியாது, காரணம் கடனுக்கான வட்டியை செலுத்த முடியாத நிலையில் தான் பியூச்சர் ரீடைல் உள்ளது. இந்த நிலையில் எப்படி ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Retail takeover 200 Future Retail stores, offers jobs to store employees; Amazon Shocks

Reliance Retail takeover 200 Future Retail stores, offers jobs to store employees; Amazon Shocks பியூச்சர் ரீடைல் கடைகளைக் கைப்பற்றி வரும் ரிலையன்ஸ்.. ஊழியர்கள் மகிழ்ச்சியின் உச்சம்..!
Story first published: Saturday, February 26, 2022, 20:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X