மும்பை: இந்தியாவில் லைஃப் ஸ்டைல், ஷாப்பர்ஸ் ஸ்டாப் பிராண்டுகளுக்கு போட்டியாக ரிலையன்ஸ் குழுமம் நடத்தி வந்த செண்ட்ரோ ( Centro) கடைகளை தற்காலிகமாக மூடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாக கால் பதித்து இயங்கி வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கீழ் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் செயல் பட்டு வருகிறது. ஆடை , மளிகை சாமான்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையை ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் கவனித்து வருகிறது. இதற்கு முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி தலைமை வகித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாகவே செண்ட்ரோ கடைகளும் இயங்கி வருகின்றன.

தற்போது நாடு முழுவதும் 24 இடங்களில் 33 செண்ட்ரோ கடைகளை ரிலையன்ஸ் நடத்தி வருகிறது. இந்த நவம்பர் மாத இறுதியிலேயே ரிலையன்ஸ் ரீடெய்ல் கிட்டத்தட்ட 24 செண்ட்ரோ கடைகளை மூடுவதாகவும், மற்ற கடைகள் அடுத்த மாதத்தில் மூடப்படும் என்றும் சொல்லப்படுகிறது .
ஏற்கனவே இந்த நிறுவனம் மூன்று இடங்களில் கடைகளை மூடிவிட்டது. இந்த நிறுவன செயல்பாடுகளை தற்போது மாற்றி அமைக்க இருப்பதாகவும் அதற்காகவே கடைகளை மூடுவதாகவும் ரிலையன்ஸ் ரீடெய்ல் தரப்பில் சொல்லப்படுகிறது.
தற்காலிகமாக செண்ட்ரோ கடைகளை மூடிவிட்டு அதன் செயல்பாடுகளை முழுக்க முழுக்க மறுக்கட்டமைப்பு செய்யப் போகிறது என ஊழியர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாம். அண்மையில் தான் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் வெளிநாடுகளை சேர்ந்த 80 பிராண்டுகளோடு கைகோர்த்தது.
நேரடியாக ரிலையன்ஸ் நிறுவன தளங்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் வாயிலாக வெளிநாட்டு நிறுவனங்களின் ஆடை ஆபரணங்கள் மற்றும் காலணிகளை பிரத்தேகமாக விற்பனை செய்வது என ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தான் செண்ட்ரோவை தற்காலிகமாக மூடுவது என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 450 பிராண்டுகளுக்கு சொந்தமான பொருட்கள் செண்ட்ரோ மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இந்தியாவில் கடந்த ஆண்டில் ரீடெய்ல் விற்பனை 4% வரை குறைந்துள்ளது என சொல்லப்படுகிறது. இதன் எதிரொலியாக ரிலையன்ஸ் ரீடெய்லின் வருமானமும் குறைந்தது. நாடு முழுவதும் 18,946 கடைகளை நடத்தி வரும் ரிலையன்ஸ் ரீடெய்ல் கடந்த காலாண்டில் 3.5% வருவாய் இழப்பை சந்தித்தது.
மேக்ரோ சந்தை மிகவும் வலுவிழந்து காணப்படுவதால் தங்களின் விற்பனை சரிவில் இருப்பதாக ரிலையன்ஸ் ரீடெய்லின் நிதி அதிகாரி தினேஷ் தலுஜா, கூறியுள்ளார். நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் 796 கடைகளை புதிதாக திறந்துள்ள ரிலையன்ஸ் ரீடெய்ல் , கடந்த காலாண்டில் புதிதாக 110 கடைகளை மட்டுமே திறந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications