ஒரு காலத்தில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வந்த சில்லறை வணிக நிறுவனமான, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவு தற்போது விற்பனை மந்தநிலையை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக இந்நிறுவனத்தின் மதிப்பீடும் முன்பை விட குறைந்துள்ளது. ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி 2022-ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் மதிப்பு 125 பில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது அம்பிட் கேபிடல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஆய்வாளர்களால் 50 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல், இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமாகும். மளிகை பொருட்கள் மற்றும் பலதரப்பட்ட பொருட்களை ரிலையன்ஸ் நிறுவனம் இந்த பிரிவின் மூலம் விற்பனை செய்கிறது. ரிலையன்ஸ் ஸ்மார்ட், ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ், ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

ரிலையன்ஸ் ரீடைல் ஷோரூம்கள் அதிக அளவில் திறக்கப்பட்டதும், பல்வேறு வகையான வணிகங்களில் கவனம் செலுத்தியதும் தான் இந்த விற்பனை மந்தநிலைக்கு காரணம் என்று முகேஷ் அம்பானியே முதலீட்டாளர்களிடம் ஒப்பு கொண்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட அனைத்து வணிகங்களிலும் இயங்கி வருகிறது.
பேஷன், மளிகை பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்து வணிகங்களிலும் ஈடுபட்டு வருகிறது. எனவே விற்பனை வீழ்ச்சியை ஈடு செய்யும் வகையில், தற்போது வேலை குறைப்பு, புதிதாக திறக்கப்படும் கடைகளில் குறைப்பு மற்றும் சந்தைப்படுத்தல், பட்ஜெட் குறைப்பு உள்ளிட்ட செலவு குறைப்பு நடவடிக்கைகளை நிறுவனம் தொடங்கியுள்ளது.
செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் பணியமர்த்தல் கட்டுப்பாடுகள்: செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறவும், முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகள் இஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடெய்ல், முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறது. அதில் பின்வரும் மாற்றங்கள் அடங்கும்.
2024 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் ரீடைல் 38,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. கடை விரிவாக்கம் குறைப்பு மற்றும் புதிய கடைகளை திறப்பதும் குறைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2024 முதல் கடுமையான பணியமர்த்தல் கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. எந்த ஒரு புதிய பணியமர்த்தலுக்கும் முகேஷ் அம்பானியின் அலுவலகத்தில் இருந்து நேரடி ஒப்புதல் தேவைப்படுகிறது. கடையில் ஊழியர்களை சேர்ப்பதற்கு கூட நிர்வாக இயக்குனர் வி.சுப்பிரமணியனின் ஒப்புதல் தேவை.
நிறுவனம் இன்னும் சந்தையில் தனக்கென ஒரு செல்வாக்கை வைத்திருக்கிறது. ஆனால் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதிலும், அதிக ஐபிஓ மதிப்பீட்டை அடைவதிலும் தான் அதன் வெற்றி உள்ளது. தற்போது செய்யப்பட்டிருக்கும் செலவு குறைப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எந்த அளவுக்கு பலன் கொடுக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications