ரிலையன்ஸ் ரீடைல் துவங்கிய ஸ்வதேஷ் கடை.. இது புதுசு கண்ணா புதுசு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையன்ஸ் ரீடைல் கைவினைஞர்கள் மட்டுமேயான சிறப்புக் கடைகளை இந்தியா முழுவதும் திறந்து அவர்களின் திறனை உலக முழுவதும் கொண்டு செல்லும் முயற்சியாக 'ஸ்வதேஷ்' என்ற பிராண்டின் கீழ் ரீடைல் கடைகளைத் திறக்க உள்ளதாக ஏப்ரல் மாதம் அறிவித்தது. இந்த நிலையில் முதல் கடையை டெல்லியில் திறக்க உள்ளது.

இந்த ஸ்வதேஷ் கடையில் விவசாயம் மற்றும் உணவுப் பொருட்கள், கைத்தறிகள், ஆடைகள், ஜவுளிகள், கைவினைப்பொருட்கள் மற்றும் கையால் செய்யப்பட்ட இயற்கைப் பொருட்கள் சந்தைப்படுத்த உள்ளது ரிலையன்ஸ் ரீடைல்

இந்த நிலையில் முதல் கடையை டெல்லியில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் கட்டமைக்க முடிவு செய்துள்ளது.

48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டிசம்பர் 17.. நிர்மலா சீதாராமன் எடுத்த திடீர் முடிவு..! 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டிசம்பர் 17.. நிர்மலா சீதாராமன் எடுத்த திடீர் முடிவு..!

கைவினை பொருட்கள்

கைவினை பொருட்கள்

இது இந்தியாவில் கையால் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு மக்கள் மத்தியில் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் நிலையில் கைவினைஞர்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் விற்பனையாளர்களுக்கு உலகளாவிய தளத்தை வழங்கும் முயற்சியில் 7 மாதமாக ரிலையன்ஸ் ரீடைல் முயற்சி செய்து வருகிறது.

ஸ்வதேஷ் ஸ்டோர்

ஸ்வதேஷ் ஸ்டோர்

முதல் ஸ்வதேஷ் ஸ்டோர் 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் 'ஸ்வதேஷ்' பிராண்டின் முதல் கடை டெல்லி-யின் முக்கிய வர்த்தகப் பகுதியான கனாட் பிளேஸ் பகுதியில் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கனாட் பிளேஸ் பகுதி
 

கனாட் பிளேஸ் பகுதி

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் ஏற்கனவே இந்தப் பிரபலமான ஷாப்பிங் ஏரியாவின் E பிளாக்கில் சுமார் 30,000 சதுர அடி இடத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளது. டெல்லி-யின் கனாட் பிளேஸ் பகுதி தான் நாட்டிலேயே மிகவும் விலை உயர்ந்தது சில்லறை விற்பனை பகுதியாகும்.

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (RRVL) இன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடைல், உள்ளூர் கைவினைஞர்களுக்கு வலுவான, இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்யக் கூடிய வீரியமான மற்றும் நிலையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க மாநில அரசுகளுடன் புதிய கூட்டாணியை ஆராய்ந்து வருகிறது. ஏற்கனவே பல மாநிலங்கள் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

கைவினைப் பொருட்கள் லிஸ்ட்

கைவினைப் பொருட்கள் லிஸ்ட்

கையால் செய்யப்பட்ட ஜவுளிகள், கைவினைப் பொருட்கள், விவசாயப் பொருட்கள் மற்றும் பிற கைவினைப் பொருட்கள் உட்படப் பலதரப்பட்ட தயாரிப்புகள் ஸ்வதேஷ் கடையில் நேரடியாக விற்பனை செய்யப்பட உள்ளது. அவை கைவினைஞர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்டு இக்கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.

பிராந்திய கைவினைஞர்கள்

பிராந்திய கைவினைஞர்கள்

உலகெங்கிலும் உள்ள நுகர்வோர்களுக்கு உண்மையான கைவினைப் பொருட்களை உரிய பிராந்திய கைவினைஞர்களிடமிருந்து நேரடியாகப் பெற்று விற்பனை செய்யவும், இந்திய கைவினைஞர்கள் மற்றும் விற்பனையாளர்களை இணைக்க ஒரு உலகளாவிய சந்தையையும் ஸ்வதேஷ் உருவாக்கும் என ரிலையன்ஸ் ரீடைல் செய்துள்ளது.

பாம்பே ஸ்டோர்

பாம்பே ஸ்டோர்

இந்தியாவில் பாம்பே ஸ்டோர் மட்டுமே கைவினைப் பொருட்களுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட வணிகமாக விளங்குகிறது. இது விமான நிலையங்கள் மற்றும் முக்கியச் சுற்றுலா நகரங்களில் கலைப்பொருட்கள், கிபிட் பொருட்கள், வீட்டு அலங்காரங்கள் மற்றும் நினைவுப் பொருட்களை விற்பனை செய்கிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் ரீடைல் என்பது ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸின் துணை நிறுவனமாகும், இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கீழ் உள்ள அனைத்துச் சில்லறை விற்பனை நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமாகும்.

ரிலையன்ஸ் ரீடைல் கடைகள்

ரிலையன்ஸ் ரீடைல் கடைகள்

ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் நிகர லாபம் கடந்த ஆண்டை காட்டிலும் 36 சதவீதம் அதிகரித்து 2,305 கோடி ரூபாயாக உள்ளது, இதேபோல் வருவாய் 44.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் ரீடைல் 9.2 மில்லியன் சதுர அடி பரப்பளவில் நாடுமுழுவதும் 795 புதிய கடைகளைத் இக்காலாண்டில் மட்டும் திறந்துள்ளது. இதன் மூலம் மொத்த கடைகளின் எண்ணிக்கையை 16,617 ஆகக் கொண்டு 54.5 மில்லியன் சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Retail to open first Swadesh store in Delhi's Connaught Place area

Reliance Retail to open first Swadesh store in Delhi's Connaught Place area
Story first published: Saturday, November 26, 2022, 21:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X