இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது தனது ரீடைல் மற்றும் டெலிகாம் வர்த்தகத்தில் அதிகளவில் கவனத்தைச் செலுத்தி வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படியிருக்கும் சூழ்நிலையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் தனது ஆப்லைன் வர்த்தகச் சந்தையை விரிவாக்கம் பணிகளைத் தற்போது துவங்கியுள்ளது, ஆதாவது மக்கள் மற்றும் சிறு விற்பனை கடைகளைத் தனது ரிலையன்ஸ் ரீடைல் குடைக்குள் இணைக்கும் பணிகளைச் செய்து வருகிறது.
இத்திட்டத்தின் முதல்கட்டமாக மளிகை பொருட்களை மக்கள் ஆர்டர் செய்தால் ஹோம் டெலிவரி செய்யும் திட்டத்தைத் தற்போது சோதனை திட்டமாக மும்பையில் செயல்படுத்தி வருகிறது. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கைகளைப் பார்க்கும்போது விற்பனையாளர்கள் மட்டுமல்ல மக்களும் வியந்து போய் நிற்கின்றனர்.
ரிலையன்ஸ் ரீடைல்
உணவு மற்றும் மளிகை பொருட்களை ஹோம் டெலிவரி செய்யும் சேவையை ரிலையன்ஸ் ரீடைல் மும்பையில் அறிமுகம் செய்துள்ளது. ஹோம் டெலிவரி சேவையை வேகமாகச் செய்யவும், மும்பையில் அனைத்து இடங்களையும் சென்று அடைய வேண்டும் எனத் திட்டமிட்ட ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் மும்பை நகரில் பல இடங்களைச் சின்னச் சின்ன மளிகைக் கடைகளை அதிரடியாகத் திறந்து வருகிறது.
ஸ்மார்ட் பாயின்ட்ஸ்
தற்போது ரிலையன்ஸ் ரீடைல் 500 முதல் 1500 சதுரடி அளவு கொண்டு கடைகளை மிகவும் குறைந்த காலகட்டத்தில் அதிகளவிலான இடங்களில் திறந்து வருகிறது. இந்தச் சிறு கடைகளை ரிலையன்ஸ் ஸ்மார்ட் பாயின்ட்ஸ் என ரிலையன்ஸ் அழைக்கிறது.
ரியல் எஸ்டேட்
ரிலையன்ஸ் தற்போது பல்வேறு நகரங்களில் 1000த்திற்கும் அதிகமான கடைகளைத் திறக்க திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருவதாக ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மற்றொரு ரியல் எஸ்டேட் வல்லுனர் கூறுகையில் வட இந்தியாவில் மட்டும் அடுத்த 3 மாதத்திற்குள் குறைந்தபட்சம் 500 கடைகளைத் திறக்க திட்டமிட்டு வருகிறது எனக் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக டெல்லி மற்றும் மும்பையில் மட்டும் தலா 100 ஸ்மார்ட் பாயின்ட்ஸ் கடைகளைத் திறக்க திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது.
மும்பை
தற்போதைய நிலவரத்தின் படி ரிலையன்ஸ் ரீடைல் மும்பை, தானே, கல்யான் பகுதிகளில் மட்டும் இதுவரையில் 18 கடைகளைத் திறந்துள்ளது. சூப்பர்மார்கெட்-இன் சிறிய வடிவம் தான் ரிலையன்ஸ் ஸ்மார்ட் பாயின்ட்ஸ் ஆனால் இதன் ஆதிக்கம் மற்றும் அதன் பயன்பாடு மிகவும் அதிகம்.
இத்திட்டத்தை வெறும் 45 நாட்களுக்குள் திட்டமிட்டுச் செயல்படுத்தியுள்ளது ரிலையன்ஸ் ரீடைல்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications