இந்திய ஃபாஸ்ட் பேஷன் சந்தை தாறுமாறாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் இந்த சந்தையில் போட்டி தீவிரமடைந்து வருகிறது. ஏற்கனவே டாடா குழுமத்திற்கு சொந்தமான ஃபேஷன் பிராண்ட் ஜூடியோ மாபெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில், ஆன்லைனில் மைந்திரா பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது.
இதனால் புதிய நிறுவனங்கள் தங்களுக்கான இடத்தை பிடிப்பதில் பெரும் சவாலாக உள்ளது. முகேஷ் அம்பானியின் மகளான ஈஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெயில் பிரிவின் மூலம் பல முயற்சிகள் செய்தும், பல பிராண்டுகள் துவங்கியும் பெரிய அளவிலான பலன்களை அளிக்கவில்லை.

இந்த நிலையில் தான் வேறு வழியில்லாமல் உலகளாவிய ஃபாஸ்ட் பேஷன் பிராண்டான சீனாவின் ஷீன் உடன் கூட்டாணி அமைத்தது. தற்போது ஷீன் பொருட்களை இந்திய சந்தையில் விற்பனை செய்வதற்கான சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷீன் நிறுவனம் இந்தியாவுக்கு புதியது அல்ல, சில வருடங்களுக்கு முன்பு மாபெரும் வர்த்தக சந்தையை இந்திய சந்தையில் கொண்டிருந்தது இந்த சீன நிறுவனம். ஆனால் இந்திய அரசு 200க்கும் அதிகமான சீன ஆப்களை தடை செய்யப்பட்ட போது, இதில் ஷீன் ஆப்-ம் தடை செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேறியது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ரிலையன்ஸ் ரீடைல் கூட்டணி அறிவிக்கப்ப்டடு தற்போது அஜியோ தளத்தில் ஷீன் தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் வகையில் ஒரு பைலட் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த சோதனை திட்டம் வெற்றிபெற்றால் இந்தியாவில் ஃபாஸ்ட் பேஷன் சந்தையில் ரிலையன்ஸ் பெரும் சந்தையை கைப்பற்றும்.
ரெட்சீர் கன்சல்டென்சட் அறிக்கையின்படி, இந்திய ஃபாஸ்ட் பேஷன் சந்தை 2031 ஆம் நிதியாண்டில் 50 பில்லியன் டாலர் விற்பனையை எட்டும் என கணித்துள்ளது. இதனால் தற்போது நாட்டின் அனைத்து ரீடைல் பிராண்டுகளின் முக்கிய டார்கெட் ஆக விளங்குவது இதுதான். நாட்டின் மொத்த பேஷன் ரீடைல் சந்தையில் ஃபாஸ்ட் பேஷன் சந்தை பங்கீடு மட்டும் 25-30% வரையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய நிறுவனமான டாடா-வின் ZUDIO-வை எதிர்க்க முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் சீன நிறுவனத்தை உதவியை நாடியுள்ளது. ஷீன் 2008ஆம் ஆண்டு சீனாவில் துவங்கப்பட்டாலும் தற்போது 150 நாடுகளில் விற்கப்படும் காரணத்தால் சிங்கப்பூரில் தனது தலைமையிடத்தை மாற்றி இயங்கி வருகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications