மக்களுக்கு மட்டும் அல்லாமல் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதுகாப்பான முதலீடாக இருப்பது தங்கம். அந்த வகையில் ஒரு நாட்டின் நாணய மதிப்பு, பணவீக்கம், பணபுழக்கம் போன்ற பல காரணிகளை கட்டுப்படுத்துவதில் தங்கம் முக்கிய ஆயுதமாக செயல்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில மாதங்களில் பெரும் மாற்றத்தை கண்டு வரும் வேளையில், உலகளாவிய அளவில் மத்திய வங்கிகள், குறிப்பாக வளரும் நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகளவில் வாங்கி குவித்து வருகின்றன. இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் இந்தியா முன்னணியில் உள்ளது.

உலக தங்க கவுன்சில் (WGC) வெளியிட்டுள்ள தகவலின்படி, 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் உலகளவில் 60 டன்னுக்கு அதிகமான தங்கத்தை உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வாங்கியுள்ளன. இதில் இந்திய ரிசர்வ் வங்கி மட்டும் 27 டன்னுக்கு அதிகமான தங்கத்தை வாங்கியுள்ளதாக WGC தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி மொத்தம் 77 டன்னுக்கும் அதிகமான தங்கத்தை வாங்கியுள்ளது. இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ஐந்து மடங்கு அதிகமாகும். இதன் மூலம் இந்தியாவின் தங்க இருப்பு 882 டன்னாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் மொத்த தங்க இருப்பில் 510 டன்னுக்கும் அதிகமான தங்கம் இந்தியாவில் உள்ளது, மீதமுள்ளவை லண்டன் சேமிப்பு கிடங்கில் உள்ளது.
இந்தியாவை போலவே, துருக்கி மத்திய வங்கி ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 72 டன்னுக்கும் அதிகமான தங்கத்தை வாங்கியுள்ளது. போலந்து மத்திய வங்கி 69 டன்னுக்கும் அதிகமான தங்கத்தை வாங்கியுள்ளது. இந்த மூன்று நாடுகளும் மட்டும் உலகளாவிய மத்திய வங்கிகளின் மொத்த தங்க கொள்முதலில் 60% பங்கீட்டை கொண்டுள்ளது.
துருக்கி மத்திய வங்கி தொடர்ச்சியாக 17 மாதங்களாக தங்கத்தை வாங்கி வருவது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. போலந்து மத்திய வங்கியும் தொடர்ச்சியாக 7 மாதங்களாக தங்கத்தை வாங்கி வருகிறது. செக் குடியரசின் மத்திய வங்கியும் தொடர்ச்சியாக 20 மாதங்களாக தங்கத்தை வாங்கி வருகிறது.
கிர்கிஸ்தானும் அக்டோபர் மாதத்தில் 2 டன்னுக்கும் அதிகமான தங்கத்தை வாங்கியுள்ளது. இது 2023 செப்டம்பர் மாதத்திற்குப் பின்னர் அதிகபட்ச மாதாந்திர வாங்கலாகும். கானா மத்திய வங்கியும் அக்டோபர் மாதத்தில் 1 டன்னுக்கும் அதிகமான தங்கத்தை வாங்கியுள்ளது. இதன் மூலம் கானாவின் தங்க இருப்பு 28 டன்னாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!



Click it and Unblock the Notifications