வாடகை வருமானத்திற்காக வீடுகளை வாங்குவது சரியா..? வங்கி FD எவ்வளவோ பெட்டர்.. அதிர்ச்சி தகவல்..!!

பொதுவாக உபரியாக பணத்தை வைத்திருப்பவர்கள் அதை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். குறிப்பாக வீட்டு குடியிருப்புகளில் (Residential Real Estate) முதலீடு செய்தால் மாதந்தோறும் வாடகை என்ற பெயரில் ஒரு நிலையான வருமானம் கிடைக்கும் என்று பலரும் கருதுகின்றனர்.

வீட்டு குடியிருப்புகளில் அப்பார்ட்மென்ட், வில்லா என அனைத்தும் வரும். இன்றைய ரியல் எஸ்டேட் துறையில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் வீடுகள் அப்பார்ட்மென்ட் வீடுகள் என்பதை மறக்க கூடாது. வீட்டு குடியிருப்புகளில் முதலீடு செய்வது மூலம் நிலையான வருமானம் கிடைக்கும் என்பதை மறுக்க முடியாது.

வாடகை வருமானத்திற்காக வீடுகளை வாங்குவது சரியா..? வங்கி FD எவ்வளவோ பெட்டர்.. அதிர்ச்சி தகவல்..!!

ஆனால் நீங்கள் வீட்டு குடியிருப்பில் மேற்கொண்ட முதலீட்டுக்கு உங்களுக்கு கிடைக்கும் வருமானம் 2 முதல் 3 சதவீதத்துக்கு மேல் இருக்காது. அதேசமயம், வீட்டு குடியிருப்பில் மேற்கொண்ட முதலீட்டை வங்கி பிக்சட் டெபாசிட்டில் போட்டால் கூட அதை காட்டிலும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

ஒருவர் ரூ.4 கோடி முதலீட்டில் ஒரு வீட்டு குடியிருப்பை வாங்குகிறார் என்று வைத்து கொள்வோம். அதன் மூலம் அவருக்கு ரூ.1,00,000 மாத வாடகை வருமானம் கிடைக்கிறது. அதில் பராமரிப்பு கட்டணமாக ரூ.10,000 மற்றும் சொத்து வரி ரூ.1,000 (ஒரு ஆண்டுக்கு ரூ.12,000) ஆகியவற்றை கழித்தால் அவருக்கு மாத வருமானமாக ரூ.89,000 தான் கிடைக்கும். அதாவது அவர் போட்ட முதலீட்டுக்கு இது 2.67 சதவீதம் தான் லாபம்.

அதேசமயம் அந்த நபர் ரூ.4 கோடியை எஸ்.பி.ஐ. வங்கியின் 3 ஆண்டு கால பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தால் 5.30 சதவீதம் ஆதாயம் கிடைக்கும். தபால் நிலையத்தில் மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு செய்து இருந்தால் 6.60 சதவீதம் வருமானம் கிடைக்கும். பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்தால் 13.08 சதவீதம் ஆதாயம் கிடைக்கக்கூடும். கடன் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்திருந்தால் 8.16 சதவீதம் வருமானம் கிடைத்து இருக்கும்.

நிதி திட்டமிடும் நிபுணர் ஒருவர் கூறுகையில், மாதாந்திர பணப் புழக்கத்திற்கு வீட்டு குடியிருப்பு நல்ல முதலீடா என்றால், இல்லை என்பது எனது பதில். நம் நாட்டில் வீட்டு குடியிருப்புகள் 2 முதல் 3 சதவீதத்துக்கு மேல் வாடகை வருமானத்தை உருவாக்கவில்லை. சொத்தை பராமரிக்க வேண்டிய செலவு உள்ளது.

மேலும் இத்தகைய வீடுகள் எத்தனை மாதம் காலியாக இருக்கும் என்பது தெரியாது. இதேபோல் வாடகைக்கு ஆட்களை கூட்டிவர சில நேரங்களில் 1 மாத வாடகை தரகு கமிஷனாக வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். வாடகை வருமானம் வரி விதிப்புக்கு பொருந்தும். வீட்டு குடியிருப்பு சொத்தை எளிதாக பணமாக்க முடியாது.

வீட்டு குடியிருப்புக்கான முதலீடு தொகை பெரியது அதனால் உங்களது அனைத்து போர்ட்போலியோவிற்கும் கவனம் செலுத்தும் அபாயத்தை சேர்க்கிறது. உங்களுக்கு ரூ.10 லட்சம் தேவைப்படுகிறது என்றால் வீட்டின் ஒரு பகுதியை உதாரணமாக குளியலறையை மட்டும் விற்பனை செய்ய முடியாது. வீட்டு குடியிருப்பு ஒரு பெரிய முதலீடு என்பது ஒரு கட்டுக்கதை.

பெரும்பாலானவர்களால் வீட்டு குடியிருப்பில் நீட்டிக்கப்பட்ட உள் வருவாய் விகிதத்தை (XIRR)கணக்கிட முடியாது. எனவே சிறந்த முதலீடு என்பது உங்கள பணம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆவது என தெரிவித்தார். இதுவே நிலத்தை வாங்கி வீடுகளை கட்டி வாடகை விடும் போது கூடுதல் செலவாகும், ஆனால் நிலத்தின் மதிப்பு உயரும் போது கூடுதலாக பலன் அளிக்க வாய்ப்புகள் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+