இந்தியாவில் சில காலமாக மோசடி சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. வயதானவர்களையும் இந்த கும்பல் விட்டு வைப்பதில்லை. நாளுக்கு ஒரு மோசடி செய்தியாவது ஊடகங்களில் வெளி வருகிறது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் ஏமாறும் நபர்கள் லட்சக்கணக்கில் தான் தங்களுடைய பணத்தை இழக்கின்றனர். ஆள் பெயர் தெரியாத நபர்களிடம் அதிக அளவில் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு முன்பு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் எச்சரித்தாலும் ஏமாறும் மக்களின் எண்ணிக்கை இன்னும் குறைந்தபாடில்லை.
அதேபோல இன்றும் ஒரு மோசடி சம்பவத்தைப் பற்றி தான் பார்க்கவுள்ளோம். டெல்லியைச் சேர்ந்த 70 வயதான ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவர் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி தனது வாழ்நாள் சேமிப்பை இழந்திருக்கிறார்.

தைவானிலிருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் அடங்கிய பார்சல் 70 வயதான முதியவர் பெயரில் வந்திருப்பதாக கூறி மோசடிப் பேர்வழிகள் அவரை ஏமாற்றி இருக்கின்றனர். சட்ட அமலாக்க அதிகாரியாக காட்டிக் கொண்டு அந்த கும்பலில் இருந்த ஒருவர் முதியவரை வற்புறுத்தி பல்வேறு கணக்குகளுக்கு ரூ.10 கோடிக்கும் அதிகமான தொகையை அனுப்ப சொல்லியிருக்கிறார். ஆனால் மோசடியாக திருடப்பட்ட பணத்தில் ரூ.60 லட்சத்தை போலீசார் முடக்கி வைத்துள்ள நிலையில், மீதி பணத்தையும் மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.
மோசடி எப்படி நடந்தது?: டெல்லியின் ரோகிணி பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட முதியவருக்கு திடீரென ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அந்த அழைப்பில் பாதிக்கப்பட்ட முதியவரிடம் அவருடைய பெயர் மற்றும் பிற அடையாள தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அப்போது முதியவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஒரு பார்சல் வந்திருப்பதாகவும், அதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் இருப்பதாகவும் மோசடிக்காரர்கள் கூறியுள்ளனர். இதனால் பயந்து போன அந்த முதியவர் அதன் பிறகு மோசடிக்காரர்கள் சொன்ன அனைத்து விஷயத்திற்கும் இணங்கியிருக்கிறார். ஒரு வேலை ஒத்துழைக்காவிட்டால் வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்து விடுவோம் என்றும் அந்த கும்பல் மிரட்டியுள்ளனர். பீதியடைந்த முதியவர் சட்ட சிக்கலை தவிர்க்கும் பொருட்டு அவர்கள் கூறிய அனைத்தையும் கேட்டிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட முதியவரை கேமரா முன்பு மணி கணக்கில் இருக்க வைத்துள்ளனர். மேலும் யாரிடமும் நடந்த விஷயத்தை கூறக்கூடாது என்று சொல்லி ஒரு அறையில் தனிமையில் இருக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கு அதிகமாக வீடியோ காலில் இருக்கச் சொல்லி இருக்கின்றனர். ஒருவேளை கேமராவை ஆப் செய்தாலோ அல்லது நகர்த்தினாலோ கைது செய்து விடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர். மேலும் அவரது முழு குடும்பத்தையும் கைது செய்து விடுவதாகவும் கூறியுள்ளனர்.
அதன் பிறகு மற்றொரு நபர் மும்பை போலீஸ் அதிகாரி போல திரையில் தோன்றியுள்ளார். அதோடு தான் சொல்வதைக் கேட்டால் கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பதாகவும் முதியவரிடம் வாக்குறுதி அளித்துள்ளார். அவருடைய நம்பிக்கையை பெற்ற அந்த முதியவர் போலீஸ்காரராக மாறுவேடமிட்ட நபர் சொல்வதற்கு இணங்கியுள்ளார். அப்படித்தான் 8 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர் தனது சேமிப்புகளையும் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றி இருக்கிறார்.
அவருடைய கணக்கை காலி செய்த பிறகு அவருடைய குழந்தைகள் பெயரில் இருக்கும் கணக்கில் இருந்த பணத்தையும் அனுப்ப சொல்லி இருக்கின்றனர். அதன் பிறகும் தொடர்ந்து பணம் கேட்டதால் சந்தேகம் அடைந்த அந்த முதியவர் நடந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மோசடியின் அளவைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கு சைபர் கிரைம் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் உடனடியாக மோசடி செய்யப்பட்ட தொகையில் ரூ.60 லட்சத்தை போலீசார் முடக்கியுள்ளனர். முடிந்தவரை பணத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications