இந்திய மக்களை ஏற்கனவே தக்காளி விலை, பெட்ரோல் விலை, மளிகை பொருட்களின் விலை உயர்வு பாடாய்படுத்தி வரும் வேளையில், நாட்டு மக்களின் முக்கிய உணவாக இருக்கும் அரிசியின் விலையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
மத்திய அரசு கடந்த வாரம் பாசுமதி அரிசி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதியை உடனடியாக தடை செய்து உத்தரவிட்டது. உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் 40% க்கும் அதிகமான பங்கை இந்தியா கொண்டுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு பாசுமதி அரிசி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதியை உடனடியாக தடை செய்து உத்தரவிட்ட நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் இந்திய மக்கள் அரிசிக்காக முட்டிமோதி கடைகளில் வாங்குகின்றனர். அமெரிக்காவில் பிரபலமான பட்டேல் பிரதர்ஸ் கடையில் இந்திய மக்கள் அரிசி விலை உயர்வின் அச்சம், தட்டுப்பாடு உருவாகுமோ என்ற அச்சத்தில் அரிசி வாங்கிய வீடியோ பெரிய அளவில் டிரெண்டானது.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் இருக்கும் இந்திய கடைகளில் இருக்கும் புதிய பலகை சமூகவலைத்தளத்தில் பெரிய அளவில் டிரெண்டாகியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் இந்திய சமுகத்தினர் அச்சத்தின் காரணமாக அதிகளவில் அரிசி மூட்டைகளை வாங்கும் காரணத்தால் கடைக்காரர்கள் புதிய கட்டுப்பாட்டை வைத்துள்ளனர்.

முதல் ஒரு ஆளுக்கு ஒரு அரிசி மூட்டை அல்லது அரிசி பை மட்டுமே என கண்டிஷன் போட்ட கடைக்காரர்களுக்கு நம்ம ஊர் மக்களின் புத்திசாலிதனத்தை புரிந்துக்கொள்ளவில்லை. ஒரே வீட்டை சேர்ந்த 4 பேர் வந்து 4 மூட்டை வாங்கி செல்ல துவங்கினர்.
இதில் கடுப்பான கடை உரிமையாளர்கள் ஒரு குடும்பத்திற்கு ஒன்று என்று கண்டிஷனை மாற்றியது. அப்படி மாற்றப்பட்டும் பெரும்பாலான கடைகளில் பாசுமதி அரிசி உட்பட அனைத்து அரிசி மூட்டைகளும் விற்பனையாகி அவுட் ஆப் ஸ்டாக் ஆகியுள்ளது. இதன் மூலம் இன்னும் அமெரிக்காவில் இந்திய மக்கள் மத்தியில் PANIC BUYING குறையவில்லை என்பது தெளிவாகிறது.


Click it and Unblock the Notifications