இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்று தனது மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் அதிகப்படியான லாபம் கிடைத்துள்ள காரணத்தால் அதிகப்படியான எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடம் இருந்த காரணத்தால் இன்று காலை முதல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் உயர்வுடனே காணப்பட்டது.
இன்று வர்த்தக நேரம் முடிந்த பின்பு வெளியான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மார்ச் காலாண்டு முடிவில் மொத்த லாபம் 19 சதவீதம் அதிகரித்து 19,299 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் இக்காலாண்டில் மொத்த வருவாய் 2 சதவீதம் அதிகரித்து 2.16 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. சந்தையில் வெளியான பல கணிப்புகளை தாண்டி லாபம் மற்றும் வருவாய் பதிவாகியிருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் குஷியாகியுள்ளனர்.

மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்டீரீஸ் குழுமத்தின் இதர வருமானம் 2918 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது, இதேபோல் EBITDA அளவு அதாவது வட்டி, வரி, இழப்பீடு போன்றவற்றுக்கு முந்தைய வருமனம் 22 சதவீதம் அதிகரித்து 41,389 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வருடாந்திர அடிப்படையில் பார்த்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மொத்த வருவாய் 23 சதவீதம் அதிகரித்து 9.76 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு மார்ச் காலாண்டில் டிஜிட்டல் சேவை பிரிவில் அதிகப்படியான வருமானம், அதிகப்படியான லாபம் கிடைத்துள்ளது. ரீடைல் வர்த்தகத்தில் கலவையான ஆப்ரேட்டிங் செயல்திறன் பதிவாகியுள்ளது, அதிகப்படியான போக்குவரத்து செலவுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிவாயு விலையில் சீரமைப்பு, oil & gas பிரிவில் வலிமையான அப்ரேஷனல் செயல்திறன் ஆகியவை பதிவாகியுள்ளது.
2023 ஆம் நிதியாண்டில் டிஜிட்டல் சர்வீஸ் வர்த்தகம் வருடாந்திர அடிப்படையில் 20 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, ரீடைல் வர்த்தகம் 30.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. O2C வர்த்தகம் 19 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. oil & gas பிரிவின் வருமானம் 2023 ஆம் நிதியாண்டில் 11 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

2023 ஆம் நிதியாண்டில் மூலதன செலவீடுகள் 1.42 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மார்ச் 31 ஆம் தேதி முடிவில் மொத்த கடன் 1.10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. மேலும் நிலுவையில் உள்ள மொத்த கடன் 3.15 லட்சம் கோடியாகவும், நிலுவையில் உள்ள கேஷ் மற்றும் கேஷ் ஈக்வலென்ட் 2.04 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications