இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL), 2025 மார்ச் மாதத்தில் முடிவடைந்த நான்காவது காலாண்டு நிதி முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிடும் சீசனை ஐடி துறை துவங்கி வைத்து, வங்கி, ஆட்டோமொபைல், FMCG துறை நிறுவனங்கள் ஆகியவை அடுத்தடுத்து வெளியிட்ட நிலையில் தற்போது பிற முக்கிய நிறுவனங்கள் அடுத்தடுத்து 4வது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் ரீடைல், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய துணை நிறுவனங்கள் தனித்தனியாக தனது நிதியியல் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 2% உயர்ந்து ரூ.19,407 கோடியாக உள்ளது. இதே காலத்தில், நிறுவனத்தின் இயக்க வருவாய் முந்திய ஆண்டின் இதேகாலக்கட்டத்தை காட்டிலும் 10% உயர்ந்து ரூ.2.64 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நான்காவது காலாண்டு முடிவுகளில், முந்தைய டிசம்பர் காலாண்டில் பதிவான ரூ.18,540 கோடியிலிருந்து 5% உயர்ந்து ரூ.19,407 கோடியாக நிகர லாபம் பதிவாகியுள்ளது. இயக்க வருவாய், காலாண்டு அடிப்படையில் 8% உயர்ந்து பதிவாகியுள்ளது.
மேலும், நிறுவனத்தின் EBITDA (இயக்க லாபத்திற்கு முன் வட்டி, வரி, கடன் வீழ்ச்சி) முந்திய ஆண்டு அளவில் 4% உயர்ந்து ரூ.48,737 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த முடிவுகள், நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் நிலையான வளர்ச்சியை காட்டுகின்றன.
மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாகம், 2024-25 நிதியாண்டிற்கு ஒரு பங்கு மதிப்புக்கு ரூ.5.50 ஈவுத்தொகையை அளிப்பதாக அறிவித்துள்ளது, இது பங்குதாரர்களுக்கு நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரிலையன்ஸ் நிர்வாரம் ஒன்று அல்லது அதிகமான தவணைகளில் ரூ.25,000 கோடி தொகையை பத்திரங்கள் (bonds) மூலம் திரட்டுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
O2C பிரிவு:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முக்கிய வர்த்தக பிரிவு அதே நேரத்தில் அதிகப்படியான வருவாய் மற்றும் லாப பங்கீட்டை கொண்ட பிரிவான O2C (Oil to Chemicals) வணிக பிரிவு சற்று மந்தமான காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இக்காலாண்டில் O2C பிரிவின் EBITDA அளவு முந்திய ஆண்டு அளவில் 10% சரிந்து ரூ.15,080 கோடியாக குறைந்துள்ளது. இந்த சரிவு, போக்குவரத்து எரிபொருள் விலைகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி மற்றும் பாலியஸ்டர் பிரிவில் லாப பகிர்வு குறைவால் ஏற்பட்டதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும், உற்பத்தி அளவு அதிகரிப்பு, மூலப்பொருள் செலவு மேம்பாடு ஆகியவற்றின் மூலம் தாக்கத்தின் அளவு குறைந்துள்ளது.
பல சவால்கள் இருந்தும் O2C பிரிவின் வருவாய் முந்திய ஆண்டு அளவில் 15% உயர்ந்து ரூ.1.64 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. நான்காவது காலாண்டில் மொத்த உற்பத்தி அளவு (throughput) 2.5% உயர்ந்து 20.3 மில்லியன் மெட்ரிக் டன் (mmt) ஆக பதிவாகியுள்ளது.

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்:
ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் டெலிகாம் பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் வருவாய் வருடாந்திர அடிப்படைில் 18% வளர்ச்சியுடன் ரூ.39,853 கோடி வருவாய் பதிவு செய்துள்ளது. EBITDA 18% உயர்ந்து ரூ.17,016 கோடியாகவும், நிகர லாபம் 26% வளர்ச்சியுடன் ரூ.7,022 கோடியாகவும் உள்ளது. கட்டண உயர்வு, ஹோம் கனெக்ஷன்ஸ் விரிவாக்கம் மற்றும் டிஜிட்டல் சேவைகளின் வளர்ச்சியால் லாபம், வருவாய் அதிகரித்துள்ளது.
அனைத்தையும் விட முதலீட்டாளர்கள் கவனிக்கும் விஷயம் ARPU, மார்ச் காலாண்டு முடிவில் இது ரூ.206.2 ஆக உயர்ந்து, தரவு பயன்பாடு 24% அதிகரித்து 184.5 எக்ஸாபைட்டுகளை எட்டியது. ஜியோவின் மொத்த பயனர்கள் எண்ணிக்கை 488 மில்லியனாகவும், இதில் 191 மில்லியன் 5G பயனர்களாகவும் உள்ளனர்.
ரிலையன்ஸ் ரீடைல்:
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் நான்காம் காலாண்டில் வருவாய் 16% வளர்ச்சியுடன் ரூ.88,620 கோடியை எட்டியது. EBITDA 14% உயர்ந்து ரூ.6,711 கோடியாகவும், நிகர லாபம் 29% வளர்ச்சியுடன் ரூ.3,519 கோடியாகவும் உள்ளது. முழு ஆண்டிற்கு மொத்த வருவாய் 8% உயர்ந்து ரூ.3.3 லட்சம் கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.12,392 கோடியாகவும் உள்ளது. இக்காலாண்டில் 1,085 புதிய கடைகள் திறக்கப்பட்டது மூலம் மொத்தம் கடைகள் எண்ணிக்கை 19,340 கடைகளாக உயர்ந்தது. வாடிக்கையாளர் எண்ணிக்கை 349 மில்லியனாகவும், பரிவர்த்தனைகள் 361 மில்லியனாகவும் உள்ளன.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications