ஜூலை மாதம் நடந்த 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயங்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான 28% வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பல விமர்சனங்கள் வந்தது மட்டும் அல்லாமல் கேமிங் துறையில் இருக்கும் நிறுவனங்கள் இதை பெரும் தடையாக பார்க்கப்பட்டது.
இதை தொடர்ந்து ஆகஸ்ட் 2 ஆம் தேதி கூட்டத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் விர்ச்சுவல் கூட்டத்தை நடத்தியது. இந்த சந்திப்பில் வரி மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிர்மலா சீதாராமன் எவ்விதமான மாற்றத்தையும் அறிவிக்காமல் சில முக்கிய விதிமாற்றங்கள், விளக்கங்கள் மட்டுமே கொடுத்து 28 சதவீதம் வரி தொடரும் என அறிவித்தார்.

இந்த இறுதி அறிவிப்பு வெளியான நிலையில் ஆன்லைன் கேமிங் துறையில் நிஜமான பணத்தை முதலீடு செய்து விளையாடும் கேம்களை உருவாக்கிய அனைத்து நிறுவனங்களும் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. காரணம் இந்த 28 சதவீத ஜிஎஸ்டி வரி நிஜ பணத்தை வைத்து விளையாடும் கேம்களுக்கு மட்டுமே.
இதனால் பெங்களூர்-ஐ தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் மொபைல் ப்ரீமியர் லீக் (MPL) நிறுவனம் சுமார் 350 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதற்கு காரணமாக 28 சதவீத வரி விதிப்பை கூறுகிறது.
இதேபோல் கவின் பார்தி மிட்டல் தலைமை வகிக்கும் Rush Gaming Universe நிறுவனத்தில் 55 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இது இந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 25 சதவீதம், இதுவும் 28 சதவீத வரி விதிப்புக்கு பின்பு நடந்த ஒரு முக்கியமான விஷயம்.
இதேபோல் பல சிறிய மற்றும் நடுத்தர கேமிங் நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தை மூடவோ அல்லது பெரிய நிறுவனங்கள் உடன் இணைக்கவோ திட்டமிட்டும், பேச்சுவார்த்தை நடத்தியும் வருகிறது.
மேலும் பல வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள் ரியல் மணி கேமிங் துறையில் முதலீடு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை பிற கேமிங் பிரிவில் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளனர். இந்த முடிவை தான் இந்தியா வென்சர் கேப்பிடல் நிறுவனம், வெளிநாட்டு வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications