தங்கம் விலையில் குண்டை போட்ட ரிப்போர்ட்.. 10 கிராம் தங்கம் விலை ரூ.8 லட்சம் வரை உயருமாம்.. நிபுணர் வார்னிங்..!

இப்போவே தங்கம் விலை ரூ.1.6 லட்சத்தை தொட்டு நம்மை கதிகலங்க வைக்குதே, இனி சாமானியர்களுக்கு தங்கம் எட்டாக்கனியா என்ற கேள்வியானது பலரின் மத்தியிலும் எழுந்துள்ளது. ஆனா இதெல்லாம் வெறும் டிரைலருமா, மெயின் பிக்சர இன்னும் பார்க்க வேண்டியது இருக்கு என்ற சூப்பர் ஸ்டாரின் டயலாக்-க்கு ஏற்ப, தங்கத்தின் தற்போதைய விலை ஏற்றம் எல்லாம் ஒரு ஆரம்பம் தான். ஆனால் இனி தான் மெயின் பிக்சரே இருக்கு என்கிறார்கள் நிபுணர்கள்.

தங்கம் 5,000 டாலரைத் கடந்துள்ள போதே உலகமே ஆடிப்போயியுள்ளது. ஆனா அதையும் தாண்டி தங்கம் ஒரு அவுன்ஸ் 27,000 டாலரை தொடும் அப்படின்னு ஒரு 'வெடிகுண்டைத் தூக்கிப் போட்டிருக்கார் புகழ்பெற்ற ரிச் டேட் புவர் டேட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி. இது வெறும் ஆசை வார்த்தை இல்லை. இது ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. காகித பணத்தின் (டாலர்) ஆயுள் முடிய போகுதா? உழைத்து சேர்த்த பணம் எல்லாம் எண்ணாகுமோங்கிற அச்சம் ஒரு பக்கம், தங்கம் வைத்திருப்பவர்கள் மட்டும் தான் இந்த பொருளாதாரப் புயலில் இருந்து தப்பிக்க முடியுமா-ங்கிற கேள்வி இன்னொரு பக்கம். சாமானியர்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவரையும் உலுக்கி எடுத்திருக்கும் கியோசாகியின் அந்த அதிரடி வார்னிங் ரிப்போர்ட் சொல்லும் உண்மை என்ன? வாருங்கள் பார்ப்போம்.

தங்கம் விலையில் குண்டை போட்ட ரிப்போர்ட்.. 10 கிராம் தங்கம் விலை ரூ.8 லட்சம் வரை உயருமாம்.. வார்னிங்!

இதோடு ஏற்றம் முடியவில்லை?

தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் தங்கம் விலை, தற்போது 5,000 டாலர்கள் என்ற முக்கிய மைல்கல்லை கடந்துள்ளது. இதே இந்திய சந்தையில் 10 கிராமுக்கு ரூ.1.6 லட்சத்தையும் கடந்துள்ளது. இந்த ஏற்றமே இனி சாமானியர்கள் எப்படி வாங்க முடியும் என்ற சூழலில், ரிச் டாட் புவர் டாட் புகழ் ராபர்ட் கியோசாகி, தங்கம் விலையின் இந்த ஏற்ற பயணம் இத்துடன் முடிந்துவிடவில்லை. வரும் ஆண்டுகளில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 27,000 டாலர்கள் வரையில் ஏற்றம் காணலாம் என கணித்துள்ளார். இந்திய மதிப்பில் 10 கிராமுக்கு சுமார் ரூ.8.68 லட்சத்தை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கியோசாகி, தங்கம் விலையேற்றத்தை உற்சாக வரவேற்றுள்ளார். மேலும் இந்த விலையேற்றமானது அவரின் நீண்ட கால விலை உயர்வு நிலைபாட்டை உறுபடுத்துவதாகவும் இருக்கிறது. தொடர்ந்து அரசு வெளியிடும் கரன்சிகளின் மதிப்பு குறைந்து வருவதாக கூறி வரும் கியோசாகி, தொடர்ந்து தங்கம், வெள்ளி மற்றும் கிரிப்டோகரன்சி போன்றவற்றில் முதலீடு செய்யலாம் என ஆதரவு தெரிவித்து வருகிறார். மேலும் தற்போது தங்கம் 5,000 டாலர்களை கடந்து விட்டது. அடுத்து 27,000 டாலர்களாக தான் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இந்த இலக்கு எவ்வளவு காலத்தில் எட்டலாம் என கூறவில்லை.

கியோசாகி கூறுவது போல் தங்கத்தின் விலை 5,000 டாலரில் இருந்து 27,000 டாலராக உயர்ந்தால், அது தற்போதைய விலையை விட 5 மடங்கு அதிகமான உயர்வாகும். சமீப காலங்களில் தங்கம் குறித்து கணிக்கப்பட்ட மிக அதிரடியான கணிப்புகளில் இதுவும் ஒன்று. தற்போதைய உச்சக்கட்ட விலையில் தங்கம் வாங்குவது பலருக்கு சுமையாக தெரியலாம், ஆனால் மேற்கண்ட இலக்கு விலையானது பலரும் நினைத்து கூட பார்த்திட முடியாத ஒன்றாகவும் இருக்கிறது.

ஏற்கனவே முந்தைய சமூக வலைதள பதிவொன்றில், தற்போதைய விலையிலும் தான் தங்கம், வெள்ளி மற்றும் கிரிப்டோகரன்சிகளை தொடர்ந்து வாங்குவேன் என்று கியோசாகி கூறியிருந்தார். இந்த சொத்துக்களின் விலை ஏறுவதை பற்றியோ அல்லது இறங்குவதை பற்றியோ தனக்கு கவலையில்லை என்றும் கூறியிருந்தார். ஏனெனில், அமெரிக்காவின் அதிகரித்து வரும் கடன் சுமையே உண்மையான பிரச்சனை என்றும், அது டாலரின் மதிப்பை தொடர்ந்து பலவீனப்படுத்தி வருகிறது என்றும் அவர் சுட்டி காட்டியிருந்தார்.

தங்கம் விலையில் குண்டை போட்ட ரிப்போர்ட்.. 10 கிராம் தங்கம் விலை ரூ.8 லட்சம் வரை உயருமாம்.. வார்னிங்!

தங்கம் விலை ஏன் உயர்கிறது?

2026-ன் வரலாற்று சாதனைக்கு பின்னால் இருக்கும் 5 காரணங்கள்

தங்கம் விலை உயர்வு என்பது ஏதோ ஒரு நாட்டின் பிரச்சனையால் மட்டும் நடப்பதில்லை. இது பல உலகளாவிய மாற்றங்களின் கூட்டு விளைவாகும். அதற்கான முக்கிய காரணிகள்:

புவிசார் அரசியல் பதற்றங்கள்: உலகில் எங்கே போர் மேகங்கள் சூழ்ந்தாலும் முதலீட்டாளர்கள் முதல் வருவது தங்கத்தை நோக்கி தான். உக்ரைன் மற்றும் காசா பகுதிகளில் நீடிக்கும் மோதல்கள், வெனிசுலா மீதான அமெரிக்காவின் நடவடிக்கை மற்றும் சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்து தீவை வாங்குவது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு விடுத்துள்ள மிரட்டல்கள், உலகளாவிய வர்த்தக பதற்றங்கள் என பலவும் உலகச் சந்தையில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.

டொனால்ட் ட்ரம்பின் அதிரடி வர்த்தக கொள்கைகள்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடா, பிரான்ஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் மீது கடுமையான வரிகளை விதிக்கப் போவதாக மிரட்டல் விடுத்து வருகிறார். இது உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போராக மாறுமோ என்ற அச்சம், பங்குச் சந்தைகளை நிலைகுலைய செய்து பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் முதலீடுகளை அதிகரித்துள்ளது.

அமெரிக்க டாலரின் வீழ்ச்சி: சர்வதேச அளவில் தங்கம் டாலரில் தான் வர்த்தகம் செய்யப்படுகிறது. டாலரின் மதிப்பு குறையும் போது, மற்ற நாட்டு நாணயங்களை (ரூபாய் போன்றவை) வைத்திருப்பவர்களுக்கு தங்கம் வாங்குவது மலிவாக தோன்றும். இது தங்கத்திற்கான தேவையை அதிகரிக்கலாம். இதன் காரணமாக விலை அதிகரிக்கலாம். இதுவே தொடர்ந்து அதிகரிவுக்கவும் முக்கிய காரணிகளில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.

மத்திய வங்கிகளின் வாங்குதல்: இந்தியா, சீனா போன்ற நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது அன்னியச் செலாவணி கையிருப்பில் டாலரை குறைத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக தங்கத்தை சேமித்து வருகின்றன. இதுவும் தங்கத்தின் விலையை நிலையாக உயர்த்தி வைக்கிறது.

2025-ன் தொடர்ச்சி: உண்மையில் இந்த விலையேற்றம் கடந்த ஆண்டே தொடங்கிவிட்டது. 1979-க்குப் பிறகு இல்லாத அளவாக 2025-ல் மட்டும் தங்கம் 70% லாபத்தைத் தந்தது. இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் தங்கம் சுமார் 17% உயர்ந்து, தனது வரலாற்றுப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது இன்னும் தொடர்ந்து அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+