சமீப காலமாக தங்கம் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. தங்கம் தான் இப்படியென்றால், வெள்ளி விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால், முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் வெள்ளியை வாங்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் தான், பிரபல நிதி ஆலோசகரும், 'ரிச் டாட் புவர் டாட்' நூலின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி (Robert Kiyosaki) முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
78 வயதான கியோசாகி, தான் எழுதிய 'ரிச் டாட்'ஸ் பிராஃபெசி' என்ற புத்தகத்தில், உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய நிதிச் சரிவு இறுதியாக இந்த ஆண்டே நிகழப் போகிறது என்று மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தச் சரிவு ஏற்படும்போது, ஓய்வூதிய மற்றும் சேமிப்புக் கணக்குகள் அனைத்தும் அழிக்கப்படலாம். இது பேபி பூமர்ஸ் தலைமுறையினரைத் தங்கள் ஓய்வுக்காலத் திட்டங்களைப் பற்றி அதிகம் கவலைப்பட வைக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், காகித அடிப்படையிலான முதலீடுகளை கைவிட்டுவிட்டு, உண்மையான மற்றும் தொட்டு உணரக்கூடிய சொத்துக்களை நோக்கிச் செல்லுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். அவரது பார்வையில், வெள்ளி மற்றும் எத்தேரியம் ஆகிய இரண்டும் இன்னும் குறைந்த மதிப்பில் இருப்பதோடு, உண்மையான தொழில்துறைப் பயன்பாடுகளையும் கொண்டுள்ளன.
மேலும், நிதிச் சரிவு ஏற்பட்டால் பேபி பூமர்ஸ் தலைமுறையினர் "வீடற்றவர்களாக மாறலாம் அல்லது தங்கள் குழந்தைகளுடன் வாழ நேரிடலாம்" என்றும் இது ஒரு சோகமான எதார்த்தம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஃபியட் கரன்சிகளை (அரசு வெளியிடும் பணத்தை) கடுமையாக விமர்சிப்பதில் பெயர் பெற்ற கியோசாகி, தனது வழக்கமான வாசகமான சேமிப்பாளர்கள் தோற்கிறார்கள் என்பதை மீண்டும் அவர் வலியுறுத்தினார். அவரது கருத்துப்படி, பணவீக்கம் மக்களின் சேமிப்பை குப்பை ஆக்கிவிடுகிறது என்று கூறுகிறார்.
கியோசாகி தனது செல்வத்தை தங்கம், வெள்ளி, பிட்காயின் மற்றும் எத்தேரியம் போன்ற கடின மற்றும் டிஜிட்டல் சொத்துக்களில் முதலீடு செய்யும்படி மக்களை வலியுறுத்தியுள்ளார். இவற்றில், வெள்ளி மற்றும் எத்தேரியம் ஆகியவை உடனடி லாபத்தை அளிக்க அதிக வாய்ப்புள்ளதாக அவர் கூறுகிறார். அச்சிடப்பட்ட சொத்துக்களைச் சேமிக்க வேண்டாம் என்று கேட்கும் அனைவருக்கும் நான் நினைவூட்டுகிறேன். உண்மையான சொத்துக்களில் முதலீடு செய்யுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஃபின்போல்ட் ஆய்வின்படி, கியோசாகி விரும்பும் சொத்துக்களான தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயின் ஆகியவை 2025 ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 40% லாபம் ஈட்டியுள்ளது. இதில் வெள்ளி 47.5% உயர்ந்து (ஒரு அவுன்ஸ் 43.89 டாலர்) முதலிடத்தில் உள்ளது. தங்கம் 43.06%, பிட்காயின் 21.17% உயர்ந்துள்ளன. இந்த ஆண்டு மிகப்பெரிய சரிவு ஏற்படுகிறதோ இல்லையோ, அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!



Click it and Unblock the Notifications