கொல்கத்தாவில் உள்ள ஒரு புதிய உணவகம் தனது மெனுவிற்காக மட்டுமல்லாமல் பெண் ரோபோ ஊழியர்களைக் கொண்ட புதுமையான சேவைக்காகவும் பலருடைய பாராட்டைப் பெற்று வருகிறது. பிதான்நகரில் அமைந்துள்ள "வீ மேடம்" என்ற உணவகம்தான் அது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை ரசித்துக்கொண்டே பெங்காலி உணவு வகைகளை சாப்பிட ஆர்வம் உள்ள உணவு பிரியர்களை வீ மேடம் ஹோட்டல் ஈர்த்து வருகிறது.
ரோபோடிக் கலாச்சாரம்: வீ மேடம்உணவகத்தில் ரோபோ சர்வர்கள் தான் ஊழியர்களாக பட்டியன்படுத்தப்படுகிறது. இந்த ரோபோக்களுக்கு பாரம்பரிய முறையில் புடவை உடுத்தி நெக்லஸ்கள், காதணிகள் போன்றவற்றைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோக்கள் தான் இங்கு வரும் விருந்தினர்களை உபசரித்து பரிமாறுகிறது. நவீன தொழில்நுட்பத்தை இந்திய கலாச்சாரத்தோடு இணைத்து விருந்தினர்களுக்கு ஒரு புதுமையான அணுகு முறையை வழங்கி வருகிறது.

இந்த ஹோட்டலில் ரோபோக்கள் பரிமாறும் வீடியோ சோசியல் மீடியா தளங்களில் பகிரப்பட்டுள்ளது. ரோபோடிக் கலாச்சாரம் இந்தியாவில் தற்போது ட்ரெண்டாங்க தொடங்கியுள்ளது. இதனால் இன்ஃப்ளேன்ஸர்கள் மற்றும் பிளாகர்கள் பல வகையான உணவுகளை ருசித்து, அழகாக உணவு பரிமாறும் ரோபோக்களின் வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர். வெளியான வீடியோவில் ரோபோக்கள் அழகாய் புடவை அணிந்து கொண்டு ஒரு பெண் நடந்து வருவது போல உணவை டேபிளுக்கு எடுத்து வருகிறது.
பலரும் இந்த புதுமையான சேவையை பாராட்டுன்றனர். தங்கள் நகரத்தில் இது போன்ற ரோபோக்களை பயன்படுத்துவது உற்சாகத்தை ஏற்படுத்துவதாகவும் கமெண்ட் செய்திருந்தனர். அதில் ஒரு பயனர் "இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!"' என்று கமெண்ட் செய்திருந்தார்.
ஆனால் சிலர் இதனால் வேலை வாய்ப்புகள் குறையக் கூடும் என்று தங்களுடைய அதிருப்தியை தெரிவித்திருந்தனர். ஒரு பயனர் "இந்த ரோபோட்க்களை பயன்படுத்துவதால் எந்தவித பயனும் இல்லை. இதனால் 10 வேலை வாய்ப்புகள் குறைந்து போயுள்ளது" என்று கமெண்ட் செய்திருந்தார்.
தொழில்நுட்ப வளர்ச்சி பாராட்டுத்தக்கதாக இருந்தாலும், அவை வேலைவாய்ப்பு விஷயத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சமீபத்தில் மைக்ரோசாப்ட் விர்ச்சுவல் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ஊழியர்களை பணியில் அமர்த்த இருப்பதாக செய்திகள் வெளியானது.
அதேபோல தற்போது அதிகரித்து வரும் AI வளர்ச்சியின் காரணமாக பல முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கங்களை அறிவித்துள்ளன. அடிக்கடி மற்றும் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டிய வேலைகளுக்கு AI கருவிகளைப் பயன்படுத்தும் காரணத்தினால் பல நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது. இந்த ரோபோட்களை ஹோட்டல்களிலும் அறிமுகப்படுத்துவதால் இதேபோன்று வேலைவாய்ப்பின்மை ஏற்படுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications