இந்த ஆண்டின் முதல் காலாண்டில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளால் மட்டும் இந்தியர்கள் ரூ.120.3 கோடியை இழந்துள்ளனர் என்று உள்துறை அமைச்சகத்தின் (MHA) தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த "மன் கி பாத்" நிகழ்ச்சியின் 115-வது எபிசோட்டில் எடுத்துரைத்தார்.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி என்றால் என்ன?: செய்யாத தவறைச் செய்ததாக கூறி ஆன்லைனில் டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்படுவதாக பாதிக்கப்படுபவரை நம்ப வைத்து அவர்களிடம் பணம் பறிப்பதே இந்த டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி ஆகும். இதற்கு பல்வேறு வழிகளை மோசடிக்காரர்கள் பயன்படுத்துகின்றனர். போதை பொருட்கள் கடத்துவதாக கூறி டிஜிட்டல் அரெஸ்ட் செய்வது, ஒருவருடைய ஆதார் கார்டு தவறான விஷயத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறி ஏமாற்றுவது என சொல்லிக்கொண்டே என மோசடிகளின் வகைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள், வர்த்தக மோசடிகள், முதலீட்டு மோசடிகள் மற்றும் டேட்டிங் அப்ளிகேஷன் மோசடிகள் உள்ளிட்ட 46 சதவீத டிஜிட்டல் மோசடி வழக்குகள் மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியாவைத் தளமாகக் கொண்ட மோசடிக்காரர்களால் நடத்தப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் சுமார் ரூ.1,776 கோடியை இழந்துள்ளனர்.
ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30, 2024 வரை 7.4 லட்சம் புகார்கள் பதிவாகியுள்ளன. 2023-ஆம் ஆண்டில் 15.56 லட்சம் புகார்களும், 2022-ஆம் ஆண்டில் 9.66 லட்சம் புகார்களும், 2021-ஆம் ஆண்டில் 4.52 லட்சம் புகார்கள் வந்துள்ளன என்று இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியால் பலரும் லட்சக்கணக்கான ரூபாயை இழந்துள்ளனர். பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் அவருடைய பெயரில் போதை பொருளை கொண்ட பார்சல் வந்துள்ளதாக கூறி ஸ்கைப் காலில் அவருடைய ஆடையை களைய வைத்து டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் மோசடிக்காரர்கள் ஏமாற்றிய கதையும் இதற்கு முன்னர் நடந்துள்ளது. எந்த ஒரு பிரச்சனைக்கும் ஆன்லைனில் தீர்வு தேடுவது கூடாது என்று சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தாலும் ஏமாறும் மக்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
சில சந்தர்ப்பங்களில் மோசடி செய்பவர்கள் சட்ட விரோதமான பொருட்கள், போதை பொருட்கள் கொண்ட பார்சல்கள் உங்களுடைய பெயரில் வந்துள்ளதாக கூறி அழைப்பு விடுத்தால் அதை நம்ப வேண்டாம் என்று போலீசார் தொடர்ந்து எச்சரிக்கின்றனர். உண்மையிலேயே ஒரு குற்றத்திற்கு நீங்கள் பொறுப்பு இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்தாலே போதுமானது. ஆனால் இது போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பலரும் தாங்கள் செய்யாத குற்றத்திற்காக பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர் என்பது வேதனை அளிக்கும் விஷயமாகத்தான் இருக்கிறது.
தற்போது மோசடிகளால் பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை கொண்டு இந்த குறிப்பிட்ட அளவு தொகையை மக்கள் இழந்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்கிறோம். ஆனால் உலகின் ஏதோ ஒரு மூலையில் இன்னமும் இதே போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சிலர் விவரம் தெரிந்து அருகில் இருக்கும் காவல் நிலையங்களுக்கு சென்று புகார் அளித்து விடுகின்றனர். சிலர் தாங்கள் ஏமாந்து விட்டோம் என்பதை தெரிந்து கொண்டு வேறு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தங்கள் பணத்தையும் இழந்து இன்றளவும் இருக்கின்றனர் என்பது தான் இன்னும் வேதனை. மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தான், இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்கும் என்பதே பலருடைய கருத்தாக உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications